‘வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் தமிழகத்தில் இருக்காது’

வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் தமிழகத்தில் இருக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

‘வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் தமிழகத்தில் இருக்காது’

வானத்தில் மின்வெட்டு இருந்தாலும் தமிழகத்தில் இருக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘வானத்தில் மின்வெட்டு இருக்கலாம்; ஆனால் தமிழகத்தில் மின்வெட்டே கிடையாது. தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது; யாரும் அச்சப்பட வேண்டாம். இந்திய அளவில் முழுமையாக அமைதி தவழும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான்’ என்றார்.

மேலும், ஸ்டாலின் தலைகுப்புற எத்தனை பல்டி அடித்தாலும் ஆட்சி அமைப்போம் என்பது திமுகவுக்கு கனவுதான் என்றும் பத்தாயிரம் உதயநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP