தமிழிசை பதவியேற்பு விழாவில் குப்புராமுவுக்கு பகிரங்கமாக வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

அப்பழுக்கற்ற, அரசியல் ஆதாயம் தேடாத, யாருடனும் எதற்காகவும் சமரசம் செய்யாத, கொண்ட கொள்கைக்காக தொழில் முறை வருமானத்தை இழந்த போதிலும் எவ்வித சலனமும் படாமல், சேது சமுத்திர திட்டத்தை கடைசிவரை எதிர்த்து, அதற்காக அப்போதைய ஆளும் கட்சியினரால் கடும் மிரட்டல்களும் எதிர்கொண்ட, சங் பரிவார் அமைப்பின் முழு ஆதரவு பெற்ற தமிழக பாஜக துணைத்தலைவர் குப்புராமுவைத்தான், கட்சியின் தமிழக தலைவராக நியமிக்க அமித் ஷா முடிவெடுத்துவிட்டதாக, பாஜக வட்டாரங்களிலேயே பேச துவங்கிவிட்டனர்.
 | 

தமிழிசை பதவியேற்பு விழாவில் குப்புராமுவுக்கு பகிரங்கமாக வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை கூண்டோடு அழிக்கும் தீவிர பணியில் களம் இறங்கியுள்ளது, பாஜக தலைமையிலான மத்திய அரசு. இதன் முக்கிய முதல் பணியாக, ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக உள்ள அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை மீண்டும் தூசி தட்டி, அவர்கள் மீது பிடியை இருக்குவதன் மூலம், ஒட்டு மொத்த ஊழல்வாதிகளையும் பிடிக்கும் முயற்சி வேகமாக நடைபெற்று வருகிறது. 

இதற்காக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகார வரம்புகளை அதிகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதற்கான சட்டம் அமல்படுத்தப்பட்டு, முன்பை விட, என்.ஐ.ஏ., அதிக அதிகாரம் பெற்ற அமைப்பாக மாறியுள்ளது. இதனால் கடும் பீதி அடைந்துள்ள எதிர்க்கட்சிகள், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கணம்மூடித்தனமாக எதிர்த்து வருகின்றன. 

தமிழிசை பதவியேற்பு விழாவில் குப்புராமுவுக்கு பகிரங்கமாக வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

எதற்கும் அஞ்சாத மத்திய அரசு, ஊழல்வாதிகள் மீதான முதல் நடவடிக்கையை, காங்கிரசை சேந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திடமிருந்து துவக்கியுள்ளது. இதற்கு முன்பே லாலு பிரசாத் யாதவ் மீதான வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டது, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும், பலமுறை ஜாமின் பெற்று, தனக்கு சாதகமான நீதிபதிகள் மூலம் பலமுறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனினும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து மேல்முறையீடு செய்து, நீதியை நிலைநாட்டியுள்ளனர். லாலு வழக்கு விசாரணையும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக சுணக்கமான கதியிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், லாலுவின் கதியே தனக்கும் வந்துவிடுமோ என்ற பீதியில் உள்ளார். அவர் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் இருந்தும், ஒரு சில நீதிபதிகளின் தயவாலேயே இத்தனை காலங்கள் தப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

தமிழிசை பதவியேற்பு விழாவில் குப்புராமுவுக்கு பகிரங்கமாக வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

தற்போதைய மத்திய அரசு, புலனாய்வு அமைப்புகளுக்கு முழு சுதத்ந்திரம் அளித்து, ஊழல் மற்றும் முறைகேடு வழக்குகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுதியுள்ளதாம். சிதம்பரத்தை அடுத்து, தமிழகத்தை சேர்ந்த திமுக தலைவர்கள் மீதான வழக்குகளை தூசி தட்ட இருப்பதாக, புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தகவலை கசியவிட்டுள்ளன. 

அதன்படி, முன்னாள் மத்திய அமைச்சர்களான, ஆ.ராசா, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன், கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான பழைய வழக்குகளை மேல்முறையீடு செய்து மீண்டும் விசாரிக்கும் முடிவில் அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனராம்.

என்.எஸ், ஜெ, குழும நிறுவனங்களுடன் தொடர்புடைய நாடெங்கிலும் உள்ள, 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் பலநாட்கள் தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கதை வசனம் எழுதிய உளியின் ஓசை திரைப்படத்தை தயாரித்தவர் என்.எஸ்., ஜெயமுருகன். அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு சாராயம் தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டது. 
அதுமட்டுமின்றி, அவர் கழகத்தின் மூத்த குடும்பம் தொடர்பான தொழில் முதலீடுகள் மற்றும் பணபரிவர்த்தனைகளில்  ஈடுபட்டடு வந்த செயல்கள், இந்த ரெய்டுகளின் மூலம் மத்திய அரசுக்கு தெரிய வந்துள்ளதாம் . அந்த நிறுவனத்திடம் பிடி இருக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
குறிப்பாக, 2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்வதன் மூலம், ராசா, கனிமொழி இடம் மீண்டும் விசாரிப்பதுடன், கலைஞர் டிவிக்கு பணம் கைமாறிய வழக்கு விசாரணையும் மீண்டும் கையில் எடுக்கப்பட உள்ளதாம். அத்துடன், சட்ட விரோத முறையில் அதிவேக பிஎஸ்என்எல் இணைப்பு வழங்கிய வழக்கில், தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரிடமும் மீண்டும் விசாரிக்க உள்ளனராம். 

தமிழிசை பதவியேற்பு விழாவில் குப்புராமுவுக்கு பகிரங்கமாக வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராக பலமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறதாம். இவை அத்தனையிலும், டெல்லி அதிகாரிகளுடனும், அங்குள்ள அரசியல்வாதிகளுடனும் பேச்சு நடத்தி இதுவரை காரியம் சந்தித்து வந்த டி.ஆர். பாலுவுக்கு எதிரான பழைய வழக்குகளும் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. 

அதே போல் வேலூர் தேர்தலின் போது துரைமுருகன் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள், அவர்களுக்கு எதிராக இதற்க்கு முன் தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்தும், மீண்டும் ஓர் அலசல் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. 

அப்படி ரெய்டுகள், அதிரடி நடவடிக்கைகள் நடத்த மத்திய புலனாய்வு அமைப்புகள் ஆயத்தமாவதை அறிந்த பாலு, பாஜக மேலிட தலைவர்களிடம் நெருக்கம் காட்டி, நடவடிக்கைகளில் இருந்து தப்பிவிடலாம் என எண்ணிய போது அவரின் சாமர்த்தியம் பலிக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது. 

எனவே, தமிழகத்தை சேர்ந்த ஊழல்வாதிகள், பிரிவினைவாதிகள், தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் நடத்தி அதன் மூலம் வெளிநாட்டு நிதியை பெற்று வெளியே தியாகி போல் வேடமிட்டு திரியும் தலைவர்கள் போல் சித்தரித்துக்கொள்ளும் நபர்கள் ஆகியோர் மீது என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஏற்கனவே ஒரு கண் வைத்துவிட்டதாக, டெல்லியிலிருந்து வரும் ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதோபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, எதிர்க்கட்சிகளின் தூற்றுதல்களை தாங்கி, யாருடனும் லாபியில் ஈடுபடாமல், அரசின் நடவடிக்கைக்கு எவ்வித பங்கமும் நேராத வகையில், தமிழகத்தில்  பாஜகவை வழிநடத்தி செல்லும் திறனுடைய ஒருவரைத்தான், தமிழக பாஜக தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுத்துள்ளாராம். 

அப்பழுக்கற்ற, அரசியல் ஆதாயம் தேடாத, யாருடனும் எதற்காகவும் சமரசம் செய்யாத, கொண்ட கொள்கைக்காக தொழில் முறை வருமானத்தை இழந்த போதிலும் எவ்வித சலனமும் படாமல், சேது சமுத்திர திட்டத்தை கடைசிவரை எதிர்த்து, அதற்காக அப்போதைய ஆளும் கட்சியினரால் கடும் மிரட்டல்களும் எதிர்கொண்ட, சங் பரிவார் அமைப்பின் முழு ஆதரவு பெற்ற தமிழக பாஜக துணைத்தலைவர் குப்புராமுவைத்தான், கட்சியின் தமிழக தலைவராக நியமிக்க அமித் ஷா முடிவெடுத்துவிட்டதாக, பாஜக வட்டாரங்களிலேயே பேச துவங்கிவிட்டனர். 

தமிழிசை பதவியேற்பு விழாவில் குப்புராமுவுக்கு பகிரங்கமாக வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டி பட்டியலில் இடம்பெற்றிருந்த தமிழக தலைவர்களில் சிலரே, இந்த தகவலை தங்களுக்கு வேண்டியவர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனினும், தலைவர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக சற்று தாமதம் ஆனாலும், குப்புராமுக்குத்தான் அந்த பதவி தரப்படுகிறது என்பது, பாஜக உள்வட்டாரங்களில் உறுதியான தகவலாகவே உலாவ துவங்கிவிட்டது. 

பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சிலர், குப்புராமுவுக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை அமைதி காப்பதுதான் சிறப்பு என்ற வகையில், இதுகுறித்து, குப்புராமு இதுவரை  எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். குறிப்பாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர், தமிழிசை இன்று தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜக முக்கிய பிரமுகர்கள் பலர், குப்புராமுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் தொடந்து வெளியிடும் இந்த தகவல்கள், கட்சியின் உள்வட்டாரத்திலிருந்து கசியும் தகவல்களே. எனவே. இதில், யூகத்தை விட உண்மை தன்மை அதிகம் உள்ளது. பிற தலைவர்களை விட குப்புராமுவுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என அறுதியிட்டு சொல்வதற்கான காரணங்களை வரும் கட்டுரைகளில் காணலாம். தமிழக பாஜக புதிய தலைவர் குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP