அமெரிக்காவில் ‘யாதும் ஊரே திட்டம்’ தொடக்கம்

அமெரிக்காவில் ’யாதும் ஊரே’ திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 | 

அமெரிக்காவில் ‘யாதும் ஊரே திட்டம்’ தொடக்கம்

அமெரிக்காவில் ’யாதும் ஊரே’ திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 

தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தற்போது அமெரிக்காவில் உள்ளார்.
 

இந்த நிலையில், நியூயார்க் நகரில் தமது தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் , முதலமைச்சர் பழனிசாமி, சட்டமன்ற விதி 110-ல் அறிவிக்கப்பட்டபடி, ’யாதும் ஊரே’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.  அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, தமிழகத்துக்கு தொழில் முதலீடு பெற இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
 

முன்னதாக, இக்கூட்ட த்தில் ரூ.2,780 கோடியில் தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP