கே.எஸ் அழகிரி ஒரு பூஜ்ஜியம்: அமைச்சர் விமர்சனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பூஜ்ஜியத்திற்கு சமம் என்றும் திராவிட கட்சிகளின் தோள்களில் சவாரி செய்வது தான் காங்கிரசின் வழக்கம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
 | 

கே.எஸ் அழகிரி ஒரு பூஜ்ஜியம்: அமைச்சர் விமர்சனம்

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பூஜ்ஜியத்திற்கு சமம் என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

நாங்கு நேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றும் தோல்வி பயத்தில் அதிமுக காங்கிரஸ் வேட்பாளரை விமர்சிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது குறித்து, செங்குளத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரசை டெப்பாசிட் இழக்க செய்வோம் என கூறினார். மேலும்,  திராவிட கட்சிகளின் தோள்களில் சவாரி செய்வது தான் காங்கிரசின் வழக்கம் என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கே.எஸ் அழகிரி  பூஜ்ஜியத்திற்கு சமம் என கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP