அதிமுக- அமமுக-வை மிரள வைக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

ஓட்டப்பிடாரத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக- அமமுக-வை மீறி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெற்றிபெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 | 

அதிமுக- அமமுக-வை மிரள வைக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

ஓட்டப்பிடாரத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக- அமமுக-வை மீறி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெற்றிபெற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

20 தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
அ.தி.மு.க.வில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் சின்னத்துரை, மாஜி எம்.எல்.ஏ மோகன் ஆகிய இருவருவரில் ஒருவர் களமிறங்க இருக்கிறார். அ.ம.மு.க-வில் பதவி இழந்த சுந்தர்ராஜூவே மாவட்ட செயலாளராக இருப்பதால் மீண்டும் களமிறக்கப்படுகிறார்.  கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் நின்று சுந்தர்ராஜிடம் தோற்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கள்மிறங்குகிறார். தி.மு.க.வும் வேட்பாளரை நிறுத்தும் என்பதால், ஒட்டப்பிடாரத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. 

அதிமுக- அமமுக-வை மிரள வைக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

கடந்தமுறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ், தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை மிக சொற்ப வாக்குகளில் வென்றார். இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ‘’ஒட்டப்பிடாரத்தை பொறுத்தவரை கடந்த முறையே  கிருஷ்ணசாமி வெற்றி பெற வேண்டியது. ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றுவிட்டனர். இந்த முறை கண்டிப்பாக டாக்டர் ஜெயிப்பார். அ.தி.மு.க.வில் 2 அணிகள் நிற்கிறது. தி.மு.க.வும் போட்டியிடுகிறது. எனவே, கட்சியா? சமுதாயமா? என்று ஓட்டுப் போடுறவன்கிட்ட சிந்தனை தோன்றும். இந்த சிந்தனை கடைசியில் சமுதாயம் பக்கமே சாயும். எனவே எங்கள் வெற்றி உறுதி’’ என்றார்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை மோகன் உள்ளூர்காரர், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகிறார்.

அதிமுக- அமமுக-வை மிரள வைக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

அதேபோல், சின்னத்துரையும் எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில் மேல்மட்ட தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரிடமும் விட்டமின் ‘ப’ இருக்கிறது. எனவே இருவரில் ஒருவர் தான் வேட்பாளர் என்று பேசப்படுகிறது. அதிலும் மாஜி மோகனுக்கு அதிக வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் போட்டி போட்டு நிற்பதால், எதற்கு பிரச்சனை என்று 3-வது நபருக்கு வாய்ப்பு கொடுக்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஏனெனில் இருவரில் ஒருவருக்குத் தான் சீட்டு கொடுக்க முடியும். சீட் கிடைக்காதவர் உள்ளடி வேலையில் ஈடுபடுவார் அல்லது அ.ம.மு.க.வுடன் இணைந்து செயல்படுவார். இதுவும் கட்சிக்கு சிக்கல். ஒருவேளை 2 பேரில் ஒருவர் நின்று ஜெயித்து வந்துவிட்டால், நம் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற பயமும் கடம்பூராருக்கு இருக்கிறதாம். இடைத்தேர்தலை பொறுத்தவரை வேட்பாளர் செலவு பண்ண தேவையில்லை. கட்சித் தலைமையே செலவு செய்துவிடும் என்பதால் புதுமுக வேட்பாளருக்கு விட்டமின் ‘ப’ தேவையில்லை.

அதிமுக- அமமுக-வை மிரள வைக்கும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

அதேபோல், எந்த விதத்திலும் அ.ம.மு.க.வுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க பெரும் முனைப்பு காட்டி வருகிறது. தி.மு.கவை பொறுத்தவரை முழுக்க முழுக்க கட்சி செல்வாக்கை நம்பியே களம் இறங்குகிறது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும்  ஏற்கனவே 2 முறை வென்ற தொகுதி. எனவே போட்டி கடுமையாக இருக்கும். பலமான தி.மு.க. அலையிலிருந்து கிருஷ்ணசாமி மீள்வாரா..? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி..?
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP