காடுவெட்டி குருவின் பெயருக்கு கலங்கம்... பா.ம.க., வசூல்வேட்டை அமோகம்!

மறைந்த காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் அமைக்க நிதி வசூலிக்கப்படுகிறது. பா.ம.க செலவில் அமைக்கப்படுவதாக கூறிவிட்டு தற்போது நிதி வசூலிக்கப்படுவதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 | 

காடுவெட்டி குருவின் பெயருக்கு கலங்கம்... பா.ம.க., வசூல்வேட்டை அமோகம்!

தனது அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்களை கட்டுக்குள் வைத்திருந்தவர் காடுவெட்டி குரு. பா.ம.க கூட்டங்களில் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பேச்சுகளைவிட குருவின் பேச்சையே ஆரவாரத்துடன் ரசிப்பார்கள் பா.ம.க.,வினர். அப்படிப்பட்ட குரு கடந்த மே 15ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தது அக்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்தது.

அதனைத் தொடர்ந்து, காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் கடனில் சிக்கித்தவிப்பதாகவும், கடனை அடைக்க குரு பயன்படுத்திய வேனை விற்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்பட்டன. குருவை, ராமதாஸ் குடும்பம் கண்டு கொள்ளாமல் விட்டதாக எண்ணிய குருவின் ஆதரவாளர்கள் மே 25 என்கிற புதிய இயக்கத்தை தொடங்கினார்கள். இது பாமகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இயக்கம் எனக் கூறப்பட்டது. இதனால், பாமக பிளவுபட இருந்தது. 

காடுவெட்டி குருவின் பெயருக்கு கலங்கம்... பா.ம.க., வசூல்வேட்டை அமோகம்!

இது குறித்து நமது நியூஸ்டிஎம் இணையதளத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி காடுவெட்டி குரு குடும்பத்தை கைவிட்ட ராமதாஸ்... உடைகிறதா பாமக? என்கிற தலைப்பில் விரிவாக எழுதி இருந்தோம். இதனை அடுத்து, பா.ம.க சார்பில் காடுவெட்டி குருவின் கடன் அடைக்கப்படும். அவரது மகனின் கல்விச்செலவை பாமகவே ஏற்றுக்கொள்ளும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.   

இந்நிலையில் காடுவெட்டி குருவுக்கு  ``ஜெ.குருவின் சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டியில் மணிமண்டபமும் அவரை அடக்கம் செய்த இடத்தில் நினைவிடமும் கோனேரிக்குப்பத்தில் தொடங்க உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சட்டக்கல்லூரிக்கு காடுவெட்டி குருவின் பெயர் வைக்கப்பட்டு நினைவுச்சிலை அமைக்கப்படும். அதற்கான செலவை பா.ம.க.,வே ஏற்றுக்கொள்ளும்” என  அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால், பல மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  
காடுவெட்டி குருவின் கடனும் அடைக்கப்படவில்லை. இதனால் திணறிக்கொண்டிருக்கிறது குருவின் குடும்பம். இது தொடர்பாக ‘ கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?’ என பாமக நிர்வாகிகளிடம் குரு ஆதரவாளர்கள் கேட்க, மணி மண்டபம் கட்டுவதற்கான பணியை இப்போது தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக பா.ம.க.,வினர் நிதி வசூலித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

காடுவெட்டி குருவின் பெயருக்கு கலங்கம்... பா.ம.க., வசூல்வேட்டை அமோகம்!

மணிமண்டபம் கட்ட பா.ம.கவே செலவை ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்ததே..? இப்போது ஏன் வெளியில் வம்சூலிக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பும் குருவின் விசுவாசுகளிடம், ‘’குரு சிகிச்சையில் இருந்தபோது சிகிச்சைக்கான செலவுகளை கட்சியினரிடம் நிதியாக வசூலிக்கலாமா? எனக் கேட்கப்பட்டது அதற்கு அவர், நிதி வசூலித்து தான் நான் உயிர் பிழைக்க வேண்டுமா? எனக்கேட்டார். அப்படிப்பட்ட பண்பாளருக்காக நாம் நிதி வசூலித்தால் யாரும் மறுக்கமாட்டார்கள்’’ எனக்கூறி வசூல் வேட்டையை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

காடுவெட்டி குருவின் பெயருக்கு கலங்கம்... பா.ம.க., வசூல்வேட்டை அமோகம்!

’’ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் குருவுக்கு மணிமண்டபம் அமைய உள்ளது. இடம், தளவாடப்பொருள்கள் என அனைத்து செலவுகளுமே மிகக் குறைவுதான். உயிர்போகும் நிலையிலும் தனது சிகிச்சைக்காக நிதி வசூலிப்பதை விரும்பாதவர் குரு. ஆனால், அவருக்கு மணிமண்டபம் கட்சி சார்பாக அமைக்கப்படும் எனக் கூறிவிட்டு மாறாக நிதி வசூலித்து வருவது காடுவெட்டி குருவை அவமதிக்கும் செயல்’’ என்கிறார்கள் குருவின் ஆதரவாளர்கள்.    

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP