கருணாஸால் கலக்கம்... குற்றாலத்தில் உல்லாச வீடியோவிற்கு டி.டி.வி.தினகரன் தடா!

இசக்கி ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் வீடியோ எடுக்கக்கக்கூடாது என அறிவுரை வழங்கியிருக்கிறார் தினகரன். காரணம் கூவத்தூரில் எடுத்த வீடியோக்களை வைத்து எடப்பாடியை கருணாஸ் மிரட்டினாரல்லவா?
 | 

கருணாஸால் கலக்கம்... குற்றாலத்தில் உல்லாச வீடியோவிற்கு டி.டி.வி.தினகரன் தடா!

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் ஓரிரு நாட்களில் தீர்ப்பு அளிக்கக் கூடும் என்ற நிலையில், 18 எம்.எல்.ஏ.க்களும் குற்றாலத்தில் நாட்களை கடத்தி வருகிறார்கள்.

கருணாஸால் கலக்கம்... குற்றாலத்தில் உல்லாச வீடியோவிற்கு டி.டி.வி.தினகரன் தடா!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களோடு, தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அறந்தாங்கி-ரத்தினசபாபதி , ரிடுத்தாச்சலம்- கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி -பிரபு ஆகியோரும் குற்றாலத்தில் இருக்கின்றனர். 
அடுத்த உத்தரவு வரும் வரை மெயின் அருவியில் இருந்து பழைய குற்றாலம் சாலை செல்லும் வழியில் இருக்கும் இசக்கி ரிசார்ட்டில் தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தினகரன் ஆதரவாளரான இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமானதுதான் இந்த ரிசார்ட்.

இந்நிலையில் அங்கே இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு தினகரன் முக்கியமான கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது ஏகப்பட்ட கிசுகிசுக்களும், கேளிக்கைகள் தொடர்பான வீடியோக்களும் சமூக தளங்களில் பரவின. அதேபோல எந்த ஒரு செய்தியும் தற்போது பரவி விடக்கூடாது என்பதால்தான் எம்.எல்.ஏ.க்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் தினகரன்.

கருணாஸால் கலக்கம்... குற்றாலத்தில் உல்லாச வீடியோவிற்கு டி.டி.வி.தினகரன் தடா!

 தற்போது ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் கையில் இருப்பதால் குற்றாலம் முழுதும் உளவுத்துறையின் முற்றுகையில் இருக்கிறது. நாம் என்ன செய்கிறோம், எப்படி நம்மை பலவீனமாக்கலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே நமது செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டில் டான்ஸ் ஆடக் கூடாது. ஸ்மார்ட் போன்களில் அவற்றைப் படம் பிடிக்கக் கூடாது. இது கேளிக்கைக்கான இடம் அல்ல. எனவே ஒழுக்கமாகவும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்” என்று இசக்கி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கியிருக்கிறார் தினகரன். இந்தக் கலக்கத்திற்கு காரணம் கூவத்தூரில் எடுத்த வீடியோக்களை வெளியிட்டு வடுவதாக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ கருணாஸ் மிரட்டி வந்தாரல்லவா? அதே நிலை தங்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது எனக் கருதுகிறாராம் தினகரன். 

கருணாஸால் கலக்கம்... குற்றாலத்தில் உல்லாச வீடியோவிற்கு டி.டி.வி.தினகரன் தடா!

தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட சிலருக்கு கண்காணிக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறாராம் தினகரன். இதனைத் தொடர்ந்து தங்க.தமிழ்ச்செல்வன் நாளை வரை குற்றாசலத்தில் இருப்பதாகவும், அடுத்து கேரளா செல்லும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். நாளை அவர்கள் இடத்தை மாற்றம் செய்வதற்கு காரணம், நாளை தீர்ப்பு வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP