திருவாரூரில் கருணாநிதி குடும்பம் போட்டியிட தி.மு.க-வினர் எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

இனியும் கருணாநிதி குடும்பத்தில் இருந்து ஒருவரை திருவாரூர் தொகுதியில் நிற்க வைக்க வேண்டுமா என தி.மு.கவினர் உள்ளூர் கட்சிப் பிரமுகரை நிற்க வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 | 

திருவாரூரில் கருணாநிதி குடும்பம் போட்டியிட தி.மு.க-வினர் எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

“திருவாரூர் தொகுதியில், கலைஞர் போட்டியிட்ட தொகுதியில் அழகிரி போட்டியிடப் போகிறார் என்ற தகவல் பரவிவருகிறது.

மு.க. அழகிரிக்கு திருவாரூரில் போட்டியிட யோசனை இருந்ததாம். அதனால்தான் தன் மகன் துரை தயாநிதியை திருவாரூக்கு அனுப்பி சர்வே ஒன்றை நடத்தியிருக்கிறார். சர்வே முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்தாற்போல் இல்லை.ச்‘திமுகவுடன் நாம் சேர்ந்து இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். தனித்துப் போட்டியிட்டால், மிகக் குறைந்த அளவே வரவேற்பு இருக்கும்’ என்று சொல்லி இருக்கிறார் துரை தயாநிதி. அதற்கு அழகிரி, ‘எல்லோரும் என்னை போட்டியிட சொன்னாலும், எனக்கு திமுகவை விட்டு விலகி நிற்க விருப்பம் இல்லை.

திருவாரூரில் கருணாநிதி குடும்பம் போட்டியிட தி.மு.க-வினர் எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான் சர்வே எடுக்கச் சொன்னேன். எதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து கட்சியில் சேர்த்துகிட்டாலே போதும். இங்கே தமிழ்நாட்டு அரசியல்தான் எனக்கு வேணும்னு நான் கேட்கலை. டெல்லிக்குப் போகச் சொன்னாலும் சந்தோஷமா போயிடுவேன்...’ என்று சொன்னாராம். இந்த தகவல் எல்லாம் ஸ்டாலின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ‘அந்த பேச்சே இங்கே எடுக்க வேண்டாம்..’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டாராம்.

திருவாரூரில் கருணாநிதி குடும்பம் போட்டியிட தி.மு.க-வினர் எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

இன்னொரு பக்கம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள், ‘தலைவர் இருந்த வரைக்கும் எங்களுக்கு திருவாரூரில் அவரை தவிர வேறு ஒருவரை யோசிக்க முடியலை. ஆனால், இனியும் தலைவர் குடும்பத்தில் இருந்து ஒருவரை நிற்க வைக்கணுமா என்று கட்சிகாரங்க எல்லோருமே கேட்கிறாங்க. உள்ளூரில் இருக்கும் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்லா இருக்கும் என்பது எல்லோருடைய கருத்தாக இருக்கு. அதனால் இந்த முறை திருவாரூக்கு உள்ளூர்க்காரர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்க..’ என கோரிக்கை வைத்திருக்கிறார்கள்’’ எனக்கூறப்படுகிறது.

திருவாரூரில் கருணாநிதி குடும்பம் போட்டியிட தி.மு.க-வினர் எதிர்ப்பு... மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி

இதனால், அதிர்ச்சியிலிருக்கும் மு.க.ஸ்டாலின் என்ன முடிவெடுப்பாரோ..? என்கிற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP