கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முதல்வர் பதிலடி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். உதகை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
 | 

கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முதல்வர் பதிலடி!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ளும்  என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம், உதகை உள்ளிட்ட இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி இறப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்தே அவர் பேசமுடியாத நிலையில் இருந்து வந்ததாக, திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் மூலம் அறிகிறேன். 

அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், ஸ்டாலின் இன்று திமுகவின் தலைவராக ஆகியிருக்கமாட்டார். பதவி ஆசை காரணமாக, தன் தந்தையையே ஸ்டாலின் வீட்டில் சிறை வைத்திருந்துள்ளார். எனவே, கருணாநிதியின் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ளும் என்று முதல்வர் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக விசாரணை மேற்கொள்ளும் என்று மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், முதல்வர்  இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP