கமலின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் பரபரப்பு பேச்சு

’சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
 | 

கமலின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் பரபரப்பு பேச்சு

’சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

"சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து" என்று கமல்ஹாசன் பேசியதற்காக, இவ்வாறு ஆவேசமாக கூறியுள்ள அமைச்சர், ‘யாரோ ஒருவர் பயங்கரவாதி என்பதால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக்கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசிவரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மதத்தையும் புண்படுத்தும்படியாக பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமலின் கட்சியை தடை செய்ய வேண்டும்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP