கமலின் கண்ணாம்பூச்சி ஆட்டம்... கடுப்பில் மு.க.ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

மக்களவை தேர்தலில் காங்கிரஸுடன் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பாக காங்., தலைவர் ராகுலை மூன்று முறை சந்தித்து கமல் பேசிட்டு வந்திருக்கிறார். இதனைக் கேள்விப்பட்டு ஸ்டாலின் கடுப்பில் இருப்பதாக கூறுகிறார்கள்
 | 

கமலின் கண்ணாம்பூச்சி ஆட்டம்... கடுப்பில் மு.க.ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

காலியாக இருக்கும், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தாலும், தி.மு.க., கூட்டணியில சேர, கமல் விரும்பலை. அதே நேரம், மக்களவை தேர்தலில், காங்கிரஸுடன் சேர்ந்து போட்டியிட முயற்சிகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக காங்., தலைவர் ராகுலை மூன்று முறை சந்தித்து கமல் பேசிட்டு வந்திருக்கிறார். ஆனால், முதல் முறை சந்தித்தது மட்டுமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரம், 'உங்களுக்காக, பல ஆண்டுகளாக தொடரும் தி.மு.க., கூட்டணியை முறிச்சுக்க முடியாது' என ராகுல் திட்டவட்டமாக சொல்லிட்டாராம். அதற்கு, 'எங்களுக்கு கூடுதல் இடங்கள் கொடுத்தால், உங்கள் அணியில் இணைகிறோம்’ என கமல் பதில் சொல்லி விட்டு வந்திருக்கிறார். சமீபத்தில், மதுரைக்கு, கமல் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சினேகன் வந்திருந்தார். அவரிடம் கமல் கட்சியினர், 'தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், குறைந்த சீட் கொடுத்தாலும், அதில் சேர்ந்து விடலாம்'என  சொல்லியிருக்கிறார்கள்.  'கண்டிப்பாக உங்க கருத்தை கமல் பரிசீலிப்பார்' என சினேகன் சொல்லி விட்டு வந்திருக்கிறார்.  

கமலின் கண்ணாம்பூச்சி ஆட்டம்... கடுப்பில் மு.க.ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

கட்சியினரின் எண்ணத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக ‘தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது. கருணாநிதியிடம் எல்லோரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருந்தது. ஸ்டாலினிடம் அது இல்லை. ஆகையால் காங்கிரஸ் கட்சி நம்மோடுதான் கூட்டணி அமைக்கும்’ என தனது கட்சி நிர்வாகிகளிடம் சொல்லி வருகிறார். இதனைக் கேள்விப்பட்ட ஸ்டாலின் கடும் அதிருப்தியாகி விட்டதாகக் கூறப்படுகிறது. தி.மு.க.வின் பெருந்தலைகள் சிலர் ‘காங்கிரஸ் நம்முடன் இருக்கபோவதில்லை. அவர்கள் வேண்டவும் வேண்டாம்.’ எனும் ரீதியில் ஸ்ஆலிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

கமலின் கண்ணாம்பூச்சி ஆட்டம்... கடுப்பில் மு.க.ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

இதைக்கேட்டு அலறிய தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ராகுலுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.  அதில், ’கமல் எனும் மண் குதிரையை நம்பி எதையும் செய்வது மிகப்பெரிய அரசியல் அவலம்’ எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இதையே தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் குறிப்பிட்டார். 

கமலின் கண்ணாம்பூச்சி ஆட்டம்... கடுப்பில் மு.க.ஸ்டாலின்... கலக்கத்தில் காங்கிரஸ்!

இதன் பிறகு டெல்லியிலிருந்து வந்த சில தூதுவர்கள் ஸ்டாலினை சந்தித்து சமாதானம் செய்துள்ளனர். அதன் பிறகே நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து இப்போது காங்கிரஸும், தி.மு.க-வும் ஆலோசித்து வருகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP