காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கமல்! 

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல் தெரிவித்துள்ளார்.
 | 

காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கமல்! 

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  காங்கிரசுடன் இணைந்து போட்டியிடும் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.  இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசன் கூறியதாவது,   

"தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது. காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்த கூட்டணி உடையும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை தமிழக அரசியலில் இருந்து அகற்ற மக்கள் நீதி மய்யம் பாடுபடும். அ.தி.மு.க.வையும், தி.மு.க. வையும் மக்கள் நீதி மய்யம் சரிசமமாகத்தான் அணுகுகிறது.

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் மூலம், அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கல்லூரிகளில் அரசியல் பேசுவது குற்றமல்ல. மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் அரசியல் பேசினாலும் தவறில்லை. கல்லூரிகளுக்கு தமிழக அரசு ரகசிய சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் நடிகர்களை உள்ளே அனுப்பாதீர்கள் என்று கூறி உள்ளது. அரசியல் பேச அனுமதிக்காதீர்கள் என்று அரசாணை அனுப்பிவிட்டு, மறுநாள் முதலமைச்சர் ஒரு கல்லூரியில் அரசியல் பேசுகிறார்." இவ்வாறு  அவர் கூறினார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP