முத்தலாக் விவகாரத்தில் ஜெ.நிலைப்பாட்டில் அதிமுக: பொள்ளாச்சி ஜெயராமன்

முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்தது போன்று தான் அதிமுக செய்திருப்பதாக அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
 | 

முத்தலாக் தடை மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற ஆய்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என அதிமுக கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து நாடாளுமன்ற ஆய்வுக்குழுவிற்கு அனுப்புவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையடுத்து, 99 எம்.பி.க்கள் ஆதரவுடன் மாநிலங்களைவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொள்ளாச்சி ஜெயராமன், முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் ஜெயலலிதா நினைத்தைபோல் அதிமுக செய்திருப்பதாகவும், ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் தான் அதிமுக உள்ளது எனவும் குறிப்பிட்டார். மேலும், முத்தலாக்  தடை விவகாரத்தில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை எனவும் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP