ஜெயலலிதா நினைவு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட அ.தி.மு.கவினர்

முன்னாள் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
 | 

ஜெயலலிதாவின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் அ.தி.மு.கவினர் இன்று மாபெரும் பேரணி நடத்தினர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த பேரணியானது நடைபெற்றது. 

பின்னர் அ.தி.மு.கவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில், ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவை கட்டி காப்போம் என்றும் அவர் வழியில் மக்களுக்கு சேவை செய்யவும் உறுதிமொழி எடுத்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வழிமொழிந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP