ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய வைத்திலிங்கம்... டி.டி.வி.தினகரனுக்கு செக்!

எடப்பாடி ஆதராவளாரன வைத்திலிங்கத்தை அரசியலில் இருந்து ஓரம் கட்ட தஞ்சை தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என தினகரன் அணியினர் தேர்தல் வேலைகளை முறுக்கேற்றி வருகின்றனர்.
 | 

ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய வைத்திலிங்கம்... டி.டி.வி.தினகரனுக்கு செக்!

ஜெயலலிதா காலத்தில் ஐவர் குழுவில் முக்கியமானவராக இருந்தவர் ஒரத்தநாடு வைத்தியலிங்கம். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு சசிகலா குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்தவர். பின்னர் தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் பதவியை பெறலாம் என நினைத்தார். ஆனால், அவர் மாநில அரசியலில் ஈடுபடக்கூடாது என நினைத்த சசிகலா குடும்பம் அவரை மாநிலங்களவை எம்.பியாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தது.  சசிகலா குடும்பத்தினரின் திட்டத்தை தெரிந்து கொண்ட வைத்திலிங்கம் அதிருப்தியால் எடப்பாடி அனியோடு சேர்ந்து கொண்டார். தங்களால் பதவியை பெற்று எடப்பாடிக்கு விசுவாசமாக மாறிய வைத்திலிங்கம் மீது சசிகலா குடும்பத்தினர் கடுங்கோபத்தில் இருந்து வருகின்றனர்.

ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய வைத்திலிங்கம்... டி.டி.வி.தினகரனுக்கு செக்!

தஞ்சாவூர் பகுதிகளில் செல்வாக்குமிக்கவராக இருக்கும் வைத்திலிங்கத்தை ஓரம் கட்டினால் தங்களுக்கு ஏதுவாக இருக்கும் என திட்டம்போட்ட டி.டி.வி.தினகரன் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தஞ்சாவூர் பகுதி சசிகலா குடும்பத்தினருக்கு மிகவும் முக்கியம். அதனை மனதில் வைத்து எடப்பாடி தஞ்சை பகுதியை வலுவாக்க திட்டமிட்டு வருகிறார். 20 தொகுதிகளில் தஞ்சையிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் இந்தத் தொகுதியும் முக்கியத்துவம் அடைந்து வருகிறது. 

இந்நிலையில், தஞ்சை இடைத்தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. அப்போது தெற்கு மாவட்டச் செயலாளரான வைத்திலிங்கம், ’’தஞ்சை சட்டசபை  தொகுதி இடைத்தேர்தலில் எதிரிகளை சுமாராக எடை போட்டுவிடக்கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும். ஆடம்பரம் கூடாது. எதிரிகள் நம்மை கண்டு அச்சம் அடையும் வகையில் உழைக்க  வேண்டும். பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி உறுப்பினர்கள் எல்லா வார்டுகளுக்கும் சென்று வாக்காளர்களை சேர்க்க வேண்டும். வாக்காளர்களை சேர்க்க காலக்கெடு இல்லை.  

ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய வைத்திலிங்கம்... டி.டி.வி.தினகரனுக்கு செக்!

ஓட்டுபோடுவதற்கு முதல் நாள் வரை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்கலாம். வார்டுதோறும் செல்லும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அங்குள்ள குறைகளை மக்களிடம் கேட்டு  அதை அமைச்சர் மற்றும் என்னை போன்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால் அந்த குறையை கலெக்டரிடம் தெரிவித்து தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நிவர்த்தி செய்து நல்ல பெயரை நாம் வாங்கி கொள்ளலாம். அவ்வாறு நல்ல பெயர் நமது கட்சிக்கு  கிடைத்தால் எளிதில் வெற்றிபெறலாம். மக்களுக்கு தேவையானவற்றை செய்ய அரசு அதிகாரிகள் உள்ளனர். எப்படியும் நாம் வெற்றி பெற்றே தீரவேண்டும்’’ என க் கூறினார்.

ஜெயலலிதா பாணியில் களமிறங்கிய வைத்திலிங்கம்... டி.டி.வி.தினகரனுக்கு செக்!

தஞ்சை தொகுதியை கோட்டைவிட்டால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என நினைக்கும் அவர், ரத்தத்தின் ரத்தங்களை  உற்சாகப்படுத்தி தேர்தல் பணிகளை இப்போதே துரிதப்படுத்தி வருகிறார். ஆனால், வைத்திலிங்கத்தின் திட்டங்களை முறியடித்து தஞ்சை தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என தினகரன் அணியினரும் தேர்தல் வேலைகளை முறுக்கேற்றி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP