தூதுவிட்ட ஜெயக்குமார்... ’தம்பி பாப்பா’வை தவிர்த்த மு.க.ஸ்டாலின்!

ஜெயக்குமார் தப்பு செய்தார் என்பதை பாதிக்கப்பட்டவர் நேரில் வந்து சொல்லவில்லையே... ஆகையால் அந்த ஆடியோ பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை’ என்று தி.மு.கவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
 | 

தூதுவிட்ட ஜெயக்குமார்... ’தம்பி பாப்பா’வை தவிர்த்த மு.க.ஸ்டாலின்!

ஜெயக்குமார் விவகாரத்தில் தினகரன் தரப்பு மட்டுமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. திமுக தரப்பில் இருந்து ஜெயக்குமாரை கண்டித்து அறிக்கை வரும் என தினகரன் தரப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால், இதுவரை திமுகவில் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. இது தொடர்பாக தலைவர் ஸ்டாலினிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள்.

‘ஒரு பெண்ணோட வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது. அதில் ஒரு அமைச்சர் சம்பந்தப்பட்டு இருக்கிறார். இதை நாம சும்மா விடக் கூடாது’ எனவும் தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஸ்டாலின் தரப்பிலோ, ‘அமைச்சரால என்னோட வாழ்க்கை நாசமாயிடுச்சு என்று இதுவரை எந்த பெண்ணும் நேரடியாக வந்து புகார் சொல்லவில்லை. ஆடியோவில் பேசியவர்கள் யாரும் இதுவரை நேரில் வரவே இல்லை. தினகரன் தரப்பு ஆட்கள் மட்டுமே மாறி மாறி பேசிட்டு இருக்காங்க. எல்லா ஆதாரங்களும் தினகரன் தரப்பில் இருந்துதான் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாக தெரியுது.

தூதுவிட்ட ஜெயக்குமார்... ’தம்பி பாப்பா’வை தவிர்த்த மு.க.ஸ்டாலின்!

 நான் சில பத்திரிகை நண்பர்களிடம் விசாரித்தபோது அவர்களும் இதையே சொன்னார்கள். ஜெயக்குமார் தப்பு செய்தாரா... இல்லையா என்பது அடுத்த பிரச்னை. முதலில் அவர் தப்பு செய்தார் என்பதை பாதிக்கப்பட்டவர் நேரில் வந்து சொல்லவில்லையே... நாளைக்கு ஒருவேளை அந்தப் பெண் நேரடியாக வந்து, ‘என் வாழ்க்கை அமைச்சரால கெட்டுப் போச்சுன்னு சொன்னேனா?’ என்று கேட்டால் என்ன செய்வது. அதனால் இந்த ஆராய்ச்சிக்குள் நாம போக வேண்டிய அவசியம் இல்லை’ என்று சொல்லிவிட்டாராம்.

மேலும், ‘அதிமுக நமக்கு எதிரிதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் பர்சனலான ஒரு விஷயத்தை கையில் எடுத்து அரசியல் செய்யும் கீழ்த்தரமான வேலையை நாம பார்க்க வேண்டியது இல்லை. ஒருவேளை நாளை அந்த பொண்ணு நேரில் வந்து பேசினால், அப்போது நிச்சயமாக அமைச்சரை கண்டிக்கலாம். அவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லியும் வற்புறுத்தலாம். இப்போது அதைப் பற்றி நாம் பேசுவது அநாகரீகம். அதனால் இது சம்பந்தமாக யாரும் எதுவும் பேச வேண்டாம். சமூக வலைத்தளங்களில் கூட இது தொடர்பாக யாரும் கருத்து சொல்ல வேண்டாம்...’என்றும் திமுகவினருக்கு வாய்மொழி உத்தரவாம்.

தூதுவிட்ட ஜெயக்குமார்... ’தம்பி பாப்பா’வை தவிர்த்த மு.க.ஸ்டாலின்!

இந்த விவகாரத்தில் மவுனமாக இருப்பதையும், ஸ்டாலின் சொன்ன தகவல்களும் ஜெயக்குமார் காதுக்கும் போயிருக்கிறது. ‘நீங்களும் இதை வெச்சு அரசியல் செய்யாமல் இருந்ததுக்கு நன்றி.’ என்று பொதுவான நண்பர் ஒருவர் மூலமாக ஸ்டாலினுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார் ஜெயக்குமார்.

தூதுவிட்ட ஜெயக்குமார்... ’தம்பி பாப்பா’வை தவிர்த்த மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அமைதிகாத்து வருவது தொடர்பாக மீம்ஸ்களும், கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. தி.மு.கவினர் ஜெயக்குமார் விவகாரம் பற்றி பேசுவாத பதிவாகியுள்ள ஒன்றில் ,’’ உ.பி: என்னப்பா அமைச்சர் ஜெயக்குமார் இப்படி பண்ணிட்டாரு... கருணாநிதி பண்ணாததையா ஜெயக்குமார் பண்ணிட்டாரு’ எனக் கருத்துக் கூறப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP