அந்திமத்தில் திமுகவா?

உலகின் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் ஒரு முடிவு வந்து தான் தீரும். கிரேக்க சாம்ராஜ்யமாகட்டும், ஜார் மன்னர்கள் அட்டூழியமாக இருக்கட்டும், நாஜிகளின் முடிவாகட்டும், குப்த ராஜியமாகட்டும் அல்லது நம் சேர, சோழ, பாண்டியர்கள் ராஜ்ஜியமாகட்டும் ஒரு முடிவு இருந்தேயிருக்கிறது. மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தவர்களின் புகழ் நல்லவிதமாகவும், தீய ஆட்சி கொடுத்தவர்களின் பெயர் கெட்ட பெயரிலும் வரலாற்றில் நாம் படித்ததே!
 | 

அந்திமத்தில் திமுகவா?

ஆனந்தன் அமிர்தன்

உலகின் எல்லா ராஜ்ஜியங்களுக்கும் ஒரு முடிவு வந்து தான் தீரும். கிரேக்க சாம்ராஜ்யமாகட்டும், ஜார் மன்னர்கள் அட்டூழியமாக இருக்கட்டும், நாஜிகளின் முடிவாகட்டும், குப்த ராஜியமாகட்டும் அல்லது நம் சேர, சோழ, பாண்டியர்கள் ராஜ்ஜியமாகட்டும் ஒரு முடிவு இருந்தேயிருக்கிறது. மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தவர்களின் புகழ் நல்லவிதமாகவும், தீய ஆட்சி கொடுத்தவர்களின் பெயர் கெட்ட பெயரிலும் வரலாற்றில் நாம் படித்ததே!

சுதந்தரத்திற்குப் பிந்திய தமிழகத்தில் நெடிய ஆட்சி என்பது திராவிடம் என்ற பொய்மையில் கட்டமைக்கப்பட்ட இந்த ஆட்சி. அது தொடங்கிய சில ஆண்டுகளிலேயே உடைபட்ட சித்தாந்தமே! திராவிடம் என்பது பெயரளவில் மட்டும் இருந்து வந்தது. திராவிடச் சித்தாந்தத்தை முதன்முதலில் உடைத்தது எம்ஜிஆர் தான். பின்பு வந்த கருணாநிதியால் கூட முழுக்க முழுக்க திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்ய முடியவில்லை. அல்லது அது பொய்த்துப் போனது என்று புரிந்து கொண்டு, திராவிடம் என்ற பெயரை வியாபாரப் பெயராகக் கொண்டு ஆட்சி செய்தார். அதன் பின் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் முற்றிலும் திராவிடம் ஒழிந்தது. எனினும், திமுகவைப் பொருத்த வரையில் திராவிடச் சித்தாந்தம் என்ற நாயின் வாலாக இருந்த கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் வைத்துக் கொண்டிருந்தனர். இருக்கின்றனர்.

இந்தக் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதை திமுக நிர்வாகிகளே கூட பின்பற்றவில்லை என்பது நாடறிந்த உண்மை. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளில் அந்நிய பிரிவினைவாதிகள் மற்றும் இவாஞ்சலிஸ்ட்கள் தமிழக அரசியல் கட்சிகளுக்குக் கொட்டிய பணத்திற்கு ஆசைப்பட்டு, திராவிடம் என்ற செத்தக் கன்றுக் குட்டிக்குள் பிரிவினைவாதம் என்ற வைக்கோல்களை நிரப்பி தமிழக மக்களிடம் ஓட்டு என்ற பாலைக் கறக்கும் உத்தியொன்று கிளம்பியது.

மக்களின் அறியாமையால் அது மீண்டும் மீண்டும் வெற்றி கண்டு வந்தது. இந்தச் சூழலில் தான் திராவிடக் கட்சிகளின் இருபெரும் தூண்களாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரும் காலமானார்கள். அவர்களுக்குப் பின் அதே உத்தியை அதேயளவு திறனுடன் கொண்டு செலுத்த அடுத்த கட்டத்தலைவர்களை வளர்க்காமல் விட்டு விட்டனர். அதன் விளைவாக, இன்று அதிமுக மற்றும் திமுக தத்தம் கட்சிகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. அந்தக் கட்சிகளில் இப்பொழுது இருக்கும் ஒரே பலம். அவர்களுக்கு எதிராக, சரியான ஆளுமையுடன் இன்னொரு தலைவர் இல்லை என்பது மட்டுமே!

அந்திமத்தில் திமுகவா?

அதிமுக கூட அடுத்த கட்டத் தலைவர்களாகச் சிலரை முன்னெடுத்து மீண்டும் தம் கட்சியைத் தட்டுத் தடுமாறி காப்பாற்றி வருகிறது. திமுகவின் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. திமுகவினைப் பொருத்தவரை அது ஒரு குடும்பத்தின் சொத்து என்றாகிவிட்டது. அதனை அந்தக் கட்சித் தொண்டர்களே மனமுவந்து ஏற்றுக் கொண்டு விட்டனர். கட்சியின் அடுத்த தலைவரை தன் குடும்பத்திலிருந்து மறைமுகமாகக் காட்டி விட்டனர். ஆனால், நிர்வாகம் என்பது முற்றிலும் இல்லாமல் போனதால், மிகப் பெரிய சரிவினில் பாதியில் நின்று கொண்டிருக்கிறது.

சரிவின் பாதியிலிருந்து மீண்டு ஏறும் அளவிற்கு தலைமைக்கு ஸ்டெமினா என்பது சுத்தமாக இல்லை. இருக்கும் நிலையிலிருந்து சரிந்து விடக் கூடாது என்பதற்காக பல ப்ரயத்தனங்களைச் செய்து வந்த போதும், காலமும் சூழலும் திமுகவின் காலடி மண்ணை மெல்ல மெல்லச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. தன் கட்சி சரிந்து வருவதை முழுவதும் உணர்ந்த அதன் தலைமை குறைந்த பட்சம் கட்சியின் சொத்துக்களையாவது காப்பாற்றிக் கொள்ளவே தற்பொழுது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

எந்தளவு கட்சி பலவீனமாக இருக்கிறது என்றால், சமூக வலைதள எழுத்தாளர்களாகிய மாரிதாஸ், கிஷோர் கே சாமி மற்றும் வளர்ந்து வரும் ஊடகவியலாளர் மதன் போன்ற தனி மனிதர்களுடன் நேரடியாக மோதும் அளவில் சப்பானியாக இருக்கிறது. சமீபத்தில் திமுக வென்ற எம்பிக்கள் எல்லாம் கூட குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை தான். தேர்தல் வியூகமோ, கொள்கையைக் காட்டியோ ஓட்டு வாங்கவில்லை. பாஜக/மோடி எதிர்ப்பு என்ற ஒரு மாயக் கட்டமைப்பை உருவாக்கி தான் வென்றோம் என்று அதன் கூட்டணித் தலைவரே வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்.

மிசா வழக்கில் கைதானது, பஞ்சமி நில விவகாரம், திருவள்ளுவர் விவகாரம் உட்பட எல்லாமே திமுகவுக்கு எதிராகவே திரும்பிக் கொண்டிருக்கிறது. இத்துடன் மீண்டும் துளிர்த்திருக்கும் 2ஜி வழக்கு ஏர்செல் மாக்ஸிஸ் வழக்கு போன்றவை எல்லாம் சர்வநிச்சியமாக திமுகவிற்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது. கட்சியைத் தாங்கிப் பிடிக்கும் அளவிற்கான பெரிய தலைகளை சபரீஷன் உட்பட அவர்கள் குடும்பத்தார்களே ஒதுக்கி வைத்திருக்கும் நிலையில், கட்சியை ஒற்றை ஆளாக நிர்வாகம் செய்யும் அளவிற்கு ஸ்டாலினின் நிர்வாகத் திறமை இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP