ஸ்டாலின் குரலை ஆராய்வதுதான் அமைச்சரின் வேலையா? கே.எஸ்.அழகிரி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குரலை ஆராய்வது தான் அமைச்சரின் வேலையா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று காலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு ஸ்டாலின் பேச்சில் மென்மையுள்ளதாகவும், மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பதில்லை எனவும் கூறியிருந்தார். 

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுக்கு பதிலளித்துள்ள கே.எஸ்.அழகிரி, மு.க.ஸ்டாலின் குரலை ஆராய்வதுதான் அமைச்சரின் வேலையா? என கேள்வி எழுப்பியதோடு, அதிமுக மீதுதான் அனைத்துவழக்குகளும் உள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் மீது எந்த வழக்கும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP