தும்பை விட்டு வாலைப்பிடிப்பதற்கா சட்டம்?

இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் போது நம்மவர்களின் பதவிக்காலமே முடிந்து இருக்கும். அதே நேரத்தில் இவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினால், அது அவர்களின் தோல்வி அல்ல. தேர்தல் கமிஷனின் முறைகேட்டை கோர்ட் திருத்தி உள்ளது.
 | 

தும்பை விட்டு வாலைப்பிடிப்பதற்கா சட்டம்?

நுாறு சதவீத தேர்ச்சி,  வாளாகத் தேர்வு ஆகிய இரண்டும் தான் மெட்ரிக் பள்ளிகள், தனியார் கல்லுாரிகளின் மந்திர சொல். இதற்காக அவை நடத்தும் நாடகங்கள் அளவில்லாதது. மெட்ரிக் பள்ளிகள் 6வது முதல் 9வது வரை படித்தாலும், சரியாக படிக்காவிட்டால், அவர்களை  வெளியேற்றி விடுவார்கள். 

அனைவருக்கும் தனியார் பள்ளிகள் தான்  கதி. இதற்கு எதிர்ப்பு வளர்ந்ததும், தங்கள் பள்ளியில் தேர்வு மையம் பெற்று அதிலேயே தேர்வு எழுத அனுமதிப்பார்கள். மதிப்பெண் பட்டியலில் மட்டும் தனித்தேர்வர் என்று இருக்கும். அதாவது அந்த பள்ளியில் தேர்ச்சி பெறுவார்கள் என்று கட்டாயம் தெரிந்தவர்கள் மட்டுமே அந்த பள்ளி மாணவர்களாக கணக்கு காட்டப்படுவார்கள். மற்றவர்கள் தனித் தேர்வர்கள். அவர்களின் தேர்வு முடிவு பள்ளியின் முடிவை பாதிக்காது.

ராணி வார இதழில் 30 ஆண்டுகளுக்கு முன்பு, குரங்கு குசலா என்று பிரபல கார்ட்டூன் வரும். அதில், 'நின்ற இடம் ஒன்று, வென்ற இடம் ஒன்று, சதவீதம் நுாறு' என்ற கார்ட்டூன். அதே போல தான், மெட்ரிக் பள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகளும்.

வளாகத் தேர்வுகளும் அப்படித்தான். தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் போலவே கல்லுாரிகளும் மாறிவிட்டன. அவர்களுக்கு இந்தனை பேரை தேர்வு செய்தால் இவ்வளவு கமிஷன் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவர்களும் சிலரை தேர்வு செய்வார்கள். சிலருக்கு ஆணை வரும் பின்னர் வேலை வராது. சிலரை சேர்த்துக் கொள்வார்கள், ஆறுமாதம் கழித்து உங்கள் பர்பாமன்ஸ சரியில்லை என்று வெளியேற்றுவார்கள்.

இந்த கதையெல்லாம் பிளஸ் 2 படித்த உடன் கல்லுாரியை தேடும் மாணவர்களின் பெற்றோர் நினைவுக்கு வராது. இதனால் வழக்கத்தை விட கூடுதாலக கல்லுாரிக்கு பணத்தை கொட்டுவார்கள்.

இதைப் போன்ற ஏமாற்று வேலைதான் லோக்சபா தேர்தலில் நடந்தது. திமுக கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த அந்த கட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட சின்னங்களில் போட்டியிட வாய்ப்பு அளித்து இருக்கலாம். 

அதில் பெரும்பாலானனை சுயேட்சை சின்னங்களாக தான் இருக்கும். கூட்டணிக் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தை பெறாமல் அல்லது பெற்று இழந்ததால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டியது கட்டாயம். அதற்கு பதிலாக திமுக சின்னத்தில் போட்டியிடுவது சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு லாபம். திமுகவிற்கு ஒட்டு மொத்தமாக எம்பிகளை விற்க வேண்டிய நிலை வந்தால் விற்று விடலாம். 

கட்சி கொறடா கட்டளை மீறி அவர்களால் செயல்பட முடியாது.  ஜெயலலிதா இருந்த போது தொகுதி மேம்பாட்டிற்கு நேரில் மனுக் கொடுத்தார்கள் அல்லவா, அதே போல மோடியிடம் சென்று மனுக் கொடுக்கவோ, அவர்கள் ஆதரவு பெற்று அமைச்சர் பதவியை பிடிக்கவோ முடியது. இது போன்ற பலன்களை கருதித்தான் மாப்பிள்ளை இவர் தான் சட்டை என்னது என ரஜினி சொல்வது போல சின்னத்தை வாடகைக்கு விட்டார்கள்.

இந்த தேர்தல் முடிவு சம்பந்தப்பட்ட எம்பிகள் தோல்வி அடைந்திருந்தால் இந்த நாடகம் அத்துடன் முடிந்து இருக்கும். ஆனால் வெற்றி பெற்றதால், இப்போது வழக்காக மாறி நிற்கிறது. அதிலும், தேர்தல் கமிஷன் பதில் சொன்னது தான் வேடிக்கை. ஒரு கட்சி உறுப்பினர் மற்றொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது, அது சட்ட விரோதம் ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒப்புக் கொண்ட விஷயத்தை கேள்வி கேட்க முடியாது என்று தேர்தல் கமிஷன் இப்போது சொல்கிறது.

சின்னத்தை வாடகைக்கு  விடுவது வேட்பு மனுத்தாக்கல் போதே தெரிந்தது. இது சட்ட விரோதம் என்றால் அப்போதே அறிவித்து இருக்கலாம். அல்லது அவர்கள் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்து இருக்கலாம். ஆனால் அதை தேர்தல் கமிஷன் செய்யவில்லை. அதாவது தேர்தல் கமிஷனின் சட்டத்தை மீறி ஒரு தேர்தல் நடத்தும்  அலுவலர் முடிவு செய்து இருக்கிறார். அவரை கண்டிக்கவோ, தண்டிக்கவோ தேர்தல் கமிஷன் முன்வரவில்லை. 

இப்போது இவர்களின் வெற்றி செல்லாது என்று  வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுவும் கூட 2வது இடம் பிடித்தவர் வழக்கு தொடர்ந்தது போல தெரியவில்லை. நீதிமன்றம் இதையே காரணம் காட்டி மனுவைத் தள்ளுபடி செய்யலாம். அதை செய்யாமல் மனுவை ஏற்றுக் கொண்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் போது நம்மவர்களின் பதவிக்காலமே முடிந்து இருக்கும். அதே நேரத்தில் இவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வழங்கினால், அது அவர்களின் தோல்வி அல்ல. தேர்தல் கமிஷனின் முறைகேட்டை கோர்ட் திருத்தி உள்ளது. 

இந்த சம்பவத்திற்கு காரணமான தேர்தல் கமிஷன் மீது என்ன தண்டனையை கோர்ட் விதிக்கப் போகிறது. இவர்கள் வெற்றி பெற்றது செல்லும் என்றால் தேர்தல் கமிஷன் விதிமுறையை கோர்ட்டும் காற்றில் பறக்க விட்டுவிட்டது என்று தான் அர்த்தம். ஒட்டுமொத்தமாக அரசு அமைப்பு தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறது. அதற்கு பெயர்தான் சட்டம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இது போன்ற சட்ட சிக்கல்கள் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது. காலத்தின் கட்டாயம். இந்த வழக்கில் தீர்ப்பு வந்து எந்த மாற்றதையும் கொண்டு வரப் போவது இல்லை. ஆனால் என்ன தீர்ப்பு வருமோ என்று திமுகவிற்கு கிலி ஏற்படுத்துவது தான் இந்த வழக்கின் நோக்கம். அதை இந்த வழக்கு நன்கு ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP