நாய் வேடம் போடும் நரிகளை நம்பி ஏமாறப்போகிறாரா அமித் ஷா?

"கட்சியின் உண்மை விசுவாசிகள் பலரும் இருக்கும் இடம் தெரியாமல் அமைதி காக்கும் நிலையில், பதவி சுகத்துக்காக, எஜமானனுக்கு விசுவாசம் காட்டும் நாய் போல் வேஷம் போட்டு, பதவியை பிடிக்க துடிக்கும் நரிகளை நம்பி, அமித் ஷா ஏமார்ந்து விடக்கூடாது "
 | 

நாய் வேடம் போடும் நரிகளை நம்பி ஏமாறப்போகிறாரா அமித் ஷா?

சுதந்திர போராட்ட காலம் தொட்டே ஜனசங்கம், சங் பரிவார் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற இயக்கங்கள் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பரிச்சயப்பட்ட ஒன்றாக இருந்த போதும், வாஜ்பாய் பிரதமர் ஆன பிறகுதான், அகில இந்திய அளவில் பாஜக என்ற கட்சி இருப்பது, தமிழக மக்கள் பலருக்கும் தெரிய வந்தது எனலாம். 

அதுவரை, தமிழகத்தில் கட்சியை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யக்கூட போதிய தலைவர்கள் அதாவது திறன்வாய்ந்த தலைவர்கள் இல்லை எனலாம். இல.கணேசன் போன்றோர் கட்சிக்காக பாடுபட்டாலும், அவர்களால், ஒட்டு மொத்த இந்தியர்களுக்கான கட்சி பாஜக என்பதை ஆணித்தரமாக மக்கள் மனதில் பதிய வைக்க முடியவில்லை. 

நாய் வேடம் போடும் நரிகளை நம்பி ஏமாறப்போகிறாரா அமித் ஷா?

ஹிந்துத்துவா பின்னணி உடைய கட்சியாக இருந்தபோதும் கூட, குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான கட்சியாகவே அது பார்க்கப்பட்டது. இந்நிலையில், வாஜ்பாய் ஆட்சிக்கு பின், பாஜக தமிழர்களிடையே நன்றாகவே தெரிய ஆரம்பித்தது. எனினும், தேசிய அளவில் அந்த கட்சி பெற்ற செல்வாக்கு, ஓட்டுகளை ஒப்பிடுகையில் தமிழகத்தில் எட்டிக்கூட பார்க்கவில்லை என்றே கூறலாம். 

அந்த நிலையில், திராவிட கட்சிகளின் அராஜகத்தையும் மீறி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி உறுப்பினர்களுக்கு தெம்பூட்டி தமிழக பாஜகவிற்கு உயிரோட்டம் பாய்ச்சிய தலைவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில், பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார்; இல.கணேசன் ராஜ்யசபா எம்பி ஆனார்.கோவையை சேர்ந்த சிபிஆர், கயிறு வாரிய தலைவர் ஆனார். 

நாய் வேடம் போடும் நரிகளை நம்பி ஏமாறப்போகிறாரா அமித் ஷா?

அவர்களுக்கு அடுத்தபடியாக, எந்த தலைவர்களும் சந்திக்காத அவமானங்கள், ஏச்சு, பேச்சுக்களை வாங்கினாலும், தமிழகத்தில் பாஜகவை உயிர்ப்புடன் வைத்ததில், தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு முக்கிய பங்குண்டு. கடந்த 5 ஆண்டுகள் அவர் கட்சிக்கு ஆற்றிய பணிக்கு அங்கீகாரம் தரும் வகையில், தற்போது அவர் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட கட்சியின் வளர்ச்சிக்கும், அதை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் பலர் பாடுபட்டுள்ளனர்.

ஆனால் கட்சிக்கு சிறிதும் தொடர்பில்லாத, அல்லது சுயநலத்திற்காகவே கட்சியில் நீண்ட நாட்களாக இருந்து வருபவர்கள் போன்றோர், மாநில தலைவர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். கட்சியின் பெயரால் இவர்களுக்கு ஆதாயமே தவிர, இவர்களால் கட்சி ஒரு இன்ச் கூட வளரவில்லை என்பதே நிதர்சனம். 

இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்தை பிடிக்க கட்சிக்காக படுபடாத, கட்சிக்குள் புதிதாக நுழைந்த, கட்சிப்பெயர் வைத்து கட்ட பஞ்சாயத்து நடத்தி பணம் பார்ப்போர், தன்னை தானே அறிவு ஜீவி என கூறிக்கொள்ளும் நபர்கள் என ஒரு பட்டாளமே டெல்லி நோக்கி படையெடுத்துள்ளதாம். 

மேற்கண்ட கும்பலை சேர்ந்த யாரேனும் ஒருவர் தமிழக பாஜக தலைவர் ஆகிவிட்டால், எந்த காலத்திலும் கட்சியை வளர்த்தெடுக்கவோ, மக்கள் மனதில் நம்பிக்கைக்குரிய கட்சியாக உருவாக்கவோ முடியாது என்ற நிலை உருவாகிவிடும் என, கட்சியின் உண்மை விசுவாசிகள் புலம்ப துவங்கியுள்ளனர். 

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, என கட்சி பேதம் இன்றி, அதன் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டியும், கண்டனம் தெரிவித்தும் விமர்சித்து வரும் நம்மிடம், பாஜக விசுவாசிகள் சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். 

நாய் வேடம் போடும் நரிகளை நம்பி ஏமாறப்போகிறாரா அமித் ஷா?

அதுமட்டுமின்றி, தங்கள் கட்சிக்கும் நடக்கும் உட்கட்சி பூசல்கள், டெல்லி வரை நடக்கும் லாபிக்கள், தமிழக தலைவர் பதவிக்கான போட்டியில்  இறங்கியுள்ளோர், அதற்காக செய்யும் திலல்லாலங்கடி வேலைகள் பற்றி மனம் திறந்து பேசினர். அவரகள் கூறியவற்றிலிருந்து சிலவற்றை வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறோம். 

"தமிழக பாஜக துணைத் தலைவர் பொறுப்பில் இருப்பவர் மதுரையை சேர்ந்த ஸ்ரீநிவாசன். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தில் இருந்தவர். தமிழகத்தில் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை அறிமுகம் செய்து துாக்கி நிறுத்தியதில் தற்போதைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கும், மதுரையை சேர்ந்த ஆடிட்டர் சுந்தரத்திற்கும் தான் பெரும் பங்கு உள்ளது. 

பிஎஸ்என்எல் - இல் பணியாற்றிய இவர், தனியார் நிகர்நிலை பல்கலையின் ஆதரவுடன், தனக்கு தானே பேராசிரியர் பட்டம் சூட்டிக்கொண்டு, வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் பேசி வருகிறார்.  மத்தியில் வாஜ்பாய் ஆட்சி செய்த காலகட்டத்தில் தமிழக தொழில் நகரங்களில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பேரும் புகழுமாக இருந்தது. அப்போது இவற்றின் கூட்டங்களுக்கு வந்து சென்றவர் தான் ஸ்ரீநிவாசன். அதைத் தவிர்த்து அமைப்பியல் ரீதியாக அந்த இயக்கத்திற்கு இவரால் எந்த பலனும் இருந்தது இல்லையாம். தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததும், சுதேசி இயக்கம் எழுச்சியுற வேண்டிய நிலையில், அது எதிர்திசையில் பயணம் செய்தது. 

அப்போது கூட ஸ்ரீநிவாசன் அந்த இயக்கத்திற்கு செய்தது எதுவும் இல்லை. ஆனால் இனி இந்த இயக்கத்தில் இருந்தால் பலன் கிடைக்காது என்று புரிந்து கொண்டவர், பிடிக்க வேண்டியவர்களை பிடித்து பாஜகவில் இணைந்தவர். தற்போது அதில் மாநில அளவில் துணைத் தலைவர் பொறுப்பு வகிக்கிறார். 

நாய் வேடம் போடும் நரிகளை நம்பி ஏமாறப்போகிறாரா அமித் ஷா?

தொலைக் காட்சி விவாதங்களில் பங்கெடுப்பதைக் காட்டிலும் வேறு எதுவும் செய்யாதவர். உள்ளாட்சி தேர்தலில் மதுரையில் உள்ள ஓர் வார்டு கவுன்சிலராக போட்டியிட்டால் கூட வெற்றி பெருவாரா என்பது சந்தேகம் தான். அப்படிப்பட்டவர், நாட்டை ஆளும் தேசிய கட்சியின் மாநிலத்தலைவர் பதவியை பிடிக்க பல தகிடத்தத்தங்களை செய்து வருகிறார். 

சொந்த செல்வாக்கு இல்லாதவர், தலைமை பண்பு என்றால் என்ன எனக்கேட்பவர், எந்த இயக்கத்தையும் வழி நடத்திய அனுபவம் இல்லாதவர், கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் இதுவரை குறிப்பிடும்படி எதுவும் செய்யாதவர், பாஜக மேலிட பொறுப்பாளர்கள், அவர்களுக்கு வேண்டப்பட்டோர் ஆகியவர்களை காகா பிடித்தே, மாநில துணைத்தலைவர் ஆகிவிட்டார். இவரின் தகுதிக்கு, இந்த பதவியே மிகப்பெரியது, சம்பந்தம் இல்லாதது. 

அவரின் கபட நாடகங்களை நம்பி, மேலிட தலைமை, அவரை தமிழக தலைவராக நியமித்தால், அது கட்சி தனக்கு தானே வைத்துக்கொள்ளும் சூனியமாகத்தான் இருக்கும். இவர் மட்டுமல்ல, இவரைப்போல், மேலும் பலர் உள்ளனர். மாற்று கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சமீபத்தில் இணைந்தவர், டிவி விவாதங்களின் மூலம் தன்னை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்பவர், தென் மாவட்ட ஜாதி ஓட்டுகளை பெற்றுவிடுவதாக கூறி தலைமையை ஏமாற்றும் நபர் என, ஒரு பட்டியலே உள்ளது. 

கட்சியின் உண்மை விசுவாசிகள் பலரும் இருக்கும் இடம் தெரியாமல் அமைதி காக்கும் நிலையில், பதவி சுகத்துக்காக, எஜமானனுக்கு விசுவாசம் காட்டும் நாய் போல் வேஷம் போட்டு, பதவியை பிடிக்க துடிக்கும்  நரிகளை நம்பி, அமித் ஷா ஏமார்ந்து விடக்கூடாது " என அவர்கள் புலம்பி தள்ளிவிட்டனர். 

ஸ்ரீனிவாசனை போல், இன்னும் பல தலைவர்களின் பெயர்களை நேரடியாக குறிப்பிட்டு, அவர்கள் தங்கள் புலம்பலை எங்களிடம் முன்வைத்துள்ளனர். அவை அனைத்தையும், வரும் நாட்களில் தொடர்ந்து வெளியிட உள்ளோம். பாஜக மட்டுமின்றி, வேறெந்த கட்சியிலும் நடக்கும் உட்கட்சி பூசல்கள், லாபிக்கள், ஓரம்கட்டும் நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து அவற்றையும் வெளியிடுவோம். 

தொடரும்...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP