திமுகவின் வெற்றிக்கு உதவிய தினகரன் - ராஜன் செல்லப்பா பேட்டி

தினகரன் திமுக வெற்றிக்கு உதவி உள்ளார்; அதிமுகவை அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தினகரன் அணி போட்டியிட்டது என ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
 | 

திமுகவின் வெற்றிக்கு உதவிய தினகரன் - ராஜன் செல்லப்பா பேட்டி

திமுக வெற்றிக்கு தினகரன் உதவி உள்ளார்; அதிமுகவை அழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தினகரன் அணி போட்டியிட்டது என ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை புதூர் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுகவுக்கு தேவையான இடங்கள் இடைத்தேர்தலில் கிடைத்துள்ளது, ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்து உள்ளார்கள். ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சொன்னார், ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை.

திமுகவில் வெற்றி பெற்ற எம்.பி க்கள் மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை, அதிமுக தோல்வி குறித்து கவலை கொள்ளவில்லை. சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாழ்த்துகள். அவர் நாடாளுமன்றத்தில் பேச மட்டுமே முடியும், திட்டங்களை அதிமுக மட்டுமே கொண்டு வர முடியும். இந்த தேர்தல் தினகரனுக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமைந்துள்ளது. தினகரன் வசம் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிமுகவுக்கு திரும்ப வேண்டும்.

தினகரன் 18 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்து விட்டு திமுகவுக்காக 3 இடங்களை வாரி கொடுத்து உள்ளார். தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் நலன் கருதியே முதல்வரிடம் பேசி உள்ளார். அதிமுகவுக்கு எதிரான பிரச்சினை வரும்போது இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் ராஜதந்திரத்தை கையாளுவார்கள்" என்று பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP