வைக்கும் மை, வெறும் மை அல்ல, அது நம் உரிமை: டி.ராஜேந்தர்

வாக்களிக்கும் போது வைக்கும் மை, வெறும் மை அல்ல, அது நம் உரிமை என்று வாக்களித்த பின் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 | 

வைக்கும்  மை, வெறும் மை அல்ல, அது நம் உரிமை: டி.ராஜேந்தர்

வாக்களிக்கும் போது வைக்கும்  மை, வெறும் மை அல்ல, அது நம் உரிமை என்று வாக்களித்த பின் இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவில் நடிகர் டி.ராஜேந்தர் வாக்களித்தார். இதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியில், ‘தேர்தலில் நாம் ஒருவருக்கு ஓட்டு போட்டால் அது மற்ற கட்சியை சார்ந்தவருக்கு ஓட்டு செல்கிறது. அப்படியான முறையே இந்தியாவில் இன்னும் உள்ளது. ஏன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்னும் இயந்திரப்பதிவு முறை கொண்டுவரப்படவில்லை’ என்றார்.

மேலும், ‘என் மகன் சிம்பு, தமிழகத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக ஓட்டுபோட வந்திருப்பார். லண்டனில் இருப்பதால் வாக்களிக்கவரவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை’ என்றும் தெரிவித்தார்.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP