அதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக பழுத்தப்பழம் என்பதால் கல்லடி படுகிறது என நடிகர் விஜய்யின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
 | 

அதிமுக பழுத்த பழம்; கல்லடிபடும் - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக பழுத்தப்பழம் என்பதால் கல்லடி படுகிறது என நடிகர் விஜய்யின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். 

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார், பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக பழுத்தப்பழம் என்பதால் கல்லடிபடுகிறது. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது தாக்குதல் நடக்கிறது என தெரிவித்தார். 

மேலும், நடிகர் விஜய், கவுண்டமணி, செந்தில் என யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று கூறிய அவர், இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என  நம்பிக்கை தெரிவித்தார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP