நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட காங்கிரசை நினைத்துவிட்டால்!

இதை விடக் கொடுமை நேர் காணலில் கலந்து கொண்ட ஒருவர் சீட்டு கொடுங்கள் எவ்வளவு கோடி வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என்றாராம். அவருக்கு சீட்டு கிடைத்து, தேர்தலில் வெற்றி பெற்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம், ஆனால் இந்த தேசத்தின் தோல்வி. இவற்றை கண்டு நெஞ்சு பொறுக்கவில்லையே.
 | 

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட காங்கிரசை நினைத்துவிட்டால்!

தேசிய கட்சிகளை, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு இன்றும் கூட கணிசமான ஆதரவாளர்கள், ஓட்டுப் போடுகிறவர்கள் இருப்பது தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று. மற்ற மாவட்டங்களை விட, கன்னியாகுமரி மாவட்டத்தில்  இது அதிகம். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியும் நாங்கள் திராவிட கட்சிகளுக்கு இணையானவர்கள் தான் என்று வெளிப்படுத்திய சம்பவம் கடந்த 26ம் தேதி நடந்தது.

கன்யாகுமரி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் எம்எல்ஏ  வந்தகுமார்,  லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதும், சட்டசபைக்கு இடைத்தேர்தல் வந்தது.  இது குறித்து பேச்சு தொடங்கியதும், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் நேரு  போன்றவர்கள் நாங்குநேரி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று கொளுத்திப் போட்டனர். 

வீராப்பிற்கு அங்கு காங்கிரஸ் கட்சியினர் அதிகம் நாங்கள் எளிதில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தோள் தட்டினர். இதனிடையே கூட்டணி முடிவுக்கு வரும் என்ற அளவிற்கு இந்த  விவாதம் சூடுபறந்தது.

ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்ததும் காங்கிரஸ் கேட்காமலேயே நாங்குநேரி  தொகுதியை விட்டுக் கொடுத்தது. இந்நிலையில்  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு  என்று முகவரி தேடித்தந்த குமரி அனந்தன் அங்கு போட்டியிட  விருப்ப மனுதாக்கதல் செய்தார். குமரிஅனந்தனுக்கு 86 வயது. 

 4 முறை எம்எல்ஏ, ஒருமுறை எம்பி பதவி வகித்துள்ளார். காமராஜரின் ஆதரவாளர். நேரு, இந்திரா, ராஜீவ், நரசிம்மராவ், சீதாராம்கேசரி ஆகிய தலைவர்களுடன்  இணைந்து கட்சியை தமிழகத்தில் வளர்த்தவர்.  தமிழகத்தில் காமராஜர் காலத்தில் கட்சிக்கு வந்து, பக்தவச்சலம், சி. சுப்பிரமணியம், மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.  

மது விலக்கை அமல்படுத்த வேண்டும், பாரதமாதாவிற்கு கோயில் கட்ட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டவர். அதையெல்லாம் மீறி அனைத்து கட்சியினரும் மரியாதையுடன் நோக்கும் தலைவர்.

அவருக்கு பல ஆண்டுகள் கழித்து கட்சியில் சேர்ந்த அழகிரி,  கிருஷ்ணசாமி, கே. ஆர் ராமசாமி ஆகியோர்  தான் இடைத் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் குழுவினர்.

இவர்கள்  குமரி அனந்தன் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார் என்று தெரிந்த உடன் அவரை பரிந்துரை செய்து இருக்கலாம்; அல்லது அவரை தனியே சந்தித்து தவிர்க்க வைத்திருக்கலாம். இந்த  2 சம்பவங்களில் எது நடந்திருந்தாலும், அது அந்த கட்சியின் மீது மரியாதையை தோற்று வித்து இருக்கும். 

அதை விடுத்து, அவரை நேர் காணலுக்கு அழைத்து கேட்ட கேள்விகள் தான் காங்கிரஸ் கட்சி கூட எவ்வளவு கேவலமாக மாறிவிட்டது என்பதை காட்டி உள்ளது.

நேர்காணலில் குமரி அனந்தனிடம், எப்போது கட்சியில் சேர்ந்தீர்கள், கட்சி நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறீர்களா என்று வழக்கமான கேள்விகளை கேட்டுள்ளனர். பின்னர்  கேட்ட கேள்விதான் அதிர்சியை ஏற்படுத்தும். தேர்தலில் சீட் கொடுத்தால் எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று அடுத்த வெடிகுண்டு கேள்வியை வீசி இருக்கிறார்.

சுந்திர போராட்டத்தில் இருந்து  தன் சொத்துக்களை  விட்டு விட்டு கட்சி கட்சி என்று வாழ்வை இழந்த பலர் காரங்கிரஸ் கட்சியில் இருந்தனர். அந்த கட்சி கொள்கையுடன் தான் இருக்கிறது என்பதற்கு குமரி அனந்தன் போன்றவர்கள் நிறைவான அடையாளங்களாக உலாவருகிறார்கள். 

அவரிடம் சென்று காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றால் பணம் இருந்தால் தான் முடியும் என்று மாநிலத்தலைவரே கூறும் அளவிற்கு தான் கட்சி யை இவர்கள் இத்தனை ஆண்டுகள் வளர்த்து இருக்கிறார்கள். இதற்கு அந்த கட்சியையே காந்தி சொன்னது போல கலைத்து விட்டுப் போகலாம். 

பணம் கொடுத்து தான் வெற்றி பெறுகிறார்கள் என்று திராவிட கட்சிகளை குறைகூறும் நடுநிலையாளர் காங்கிரஸ் இந்த இழிநிலைக்கு  வந்ததற்கு என்ன  சொல்லப் போகிறார்கள்.  குமரி அனந்தன்  சீட்டு பெறவே எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று கேள்வி எழும் போது  வெறும் தொண்டர்களாக மட்டும் இருப்பவர்கள் இது போன்ற இடங்களுக்கு வருவதற்கு ஆசைப்பட இயலுமா என அனைத்து கட்சியில் இருப்பவர்களும் யோசிக்க வேண்டும். 

20 ரூபாய் டோக்கனுக்கு கூட ஓட்டுப் போடும் நிலைக்கு வந்து விட்ட வாக்காளர்கள்  இந்த நாட்டிற்கு சுந்திரம் வாங்கி தந்த கட்சியையே எவ்வளவு செலவு செய்வீர்கள் என்று கேட்கும் நிலைக்கு தள்ளிவிட்டதை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டும்.

இதை விடக் கொடுமை நேர் காணலில் கலந்து கொண்ட ஒருவர் சீட்டு கொடுங்கள் எவ்வளவு கோடி வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என்றாராம். அவருக்கு சீட்டு கிடைத்து, தேர்தலில் வெற்றி பெற்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம், ஆனால் இந்த தேசத்தின் தோல்வி. இவற்றை கண்டு நெஞ்சு பொறுக்கவில்லையே.

பின் குறிப்பு: (இது குமரி அனந்தன் ஆதரவு கட்டுரை அல்ல; காங்கிரஸ் இவ்வளவு இழி நிலைக்கு சென்று விட்டதே என்ற ஆதங்க கட்டுரைதான். குமரி அனந்தன்  தப்பி வந்தகுமார்  நாங்குநேரி தொகுதியை ராஜினாமா செய்ததால் தான்  இந்த தேர்தல் நடக்கிறது. குமரி அனந்தன் மகள் தமிழிசை  தெலுங்கானா கவர்னர்.)

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP