நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை!

ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தெலங்கானா மாநில அரசு திகழ்கிறது. அம்மாநில அரசு உலகிலேயே மிகப் பெரிய திட்டமாக ரூ.80 ஆயிரம் கோடி செலவில் காலேஷ்வரம் நீர் பாசன திட்டத்தை அமல்படுத்த தொடங்கி உள்ளது.
 | 

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை!

'கர்நாடகா காவிரி நீர் தரவில்லை; உங்கள் ஆட்சிதானே நடக்ககிறது கேட்டு வாங்க வேண்டியது தானே. காவிரி நீர் வராமல் போனதற்கு, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி செய்தது தான் காரணம். சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்தவர் ஜெயலிதா தான்' இப்படி திமுக, அதிமுக இடையே மோதல் ஆண்டு தோறும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எங்கள் பகுதியில் நேற்று காலையில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. குழந்தைகள் நோயாளிகளை வைத்துக் கொண்டு சாப்பிடக் கூடவில்லை. இது வரையில் யாரும் வந்து உதவி செய்ய வில்லை என்ற புலம்பல் அவ்வவ்போது கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. 

நீர்நிலைகளை தூர் வாரியோ, வரத்து வாய்க்காலை மறித்தோ ஒரு ஏரியாவே உருவாகி இருக்கும். அங்கு வசிப்பவர்கள் நிலைதான் வெள்ளத்தில் சிக்கி தவிப்பது. இப்படி அரசும், மக்களும் இணைந்து நதிநீர் பிரச்னையில் அலசியம் காட்டுவதன் விளைவு, காவிரியில் பாய்ந்து வரும் தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலில் வீணாக சென்று கலக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் சாலையின் ஒரு புறம் காவிரி நிறைந்து ஓடும், மறுபுறம் உள்ள நீர்நிலையோ பிரசவமான பெண்ணின் வயிறு போல வரி வரியாக வெடிப்பு விட்டு இருக்கும். அந்த அளவிற்கு தான் நீர் மேலாண்மையில் நாம் சிறந்து இருக்கிறோம்.

மன்னர்கள் ஆட்சிகால 100 நாள் வேலைத்திட்டத்தில் கோயில்கள் உருவாகின. நீர் நிலைகள் உருவாகின. அவற்றை பராமரிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிந்தன. இதனால் பல நுாற்றாண்டுகள் கடந்தும் குளம், குளமாகவே இந்த தலைமுறைக்கு கிடைத்தது. 

ஆனால் சுந்திரம் பெற்ற, 72 ஆண்டுகளில் பல நீர்நிலைகளை இழந்து இருக்கிறோம். சுந்திர காலத்தில் 39,200 நீர் நிலைகள் தமிழத்தில் இருந்தன. அதில் 10 சதவீதம் அதாவது 3,920 நீர் நிலைகளை இழந்து இருக்கிறோம். 
மற்றவைகளில் வரத்துவாரிகள், அடைபட்டு, நீர் தேங்க வழியில்லாமல் தரிசு நிலம் போல கிடக்கிறது. 

இதற்கு காரணம் அரசு மட்டும் அல்ல, மக்களும் கூடதான் என்பது வேதனையானது. கிராமங்களில் செய்ய வேண்டிய பணிகளை அதிகாரிகள் செய்தால் அது தரமாக இருக்காது என்று அந்த கிராமமக்களே செய்தால் பலன் கிடைக்கும் என்று தான் 100 நாள் வேலைத்திட்டம், குடிமைப்பணிகள் திட்டம் போன்றவை எல்லாம் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஆனால் வேலையில்லாமல் சம்பளம் வாங்கும் ஒரு திட்டமாக 100 நாள் வேலைத்திட்டம் மாறிவிட்டது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட பணிகள் தரம் எதிர்பார்த்தற்கு அளவுக்கு இல்லை என்பதுடன்,    மற்ற பணிகளுக்கு வேலைக்கு ஆள் இல்லை. இப்படி 2 நஷ்டங்களையும் ஏற்படுத்தியது அந்த திட்டம்.

இதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு பின்னர் வாராது வந்த மாமணியாக கிடைக்கும் பருவமழை எந்த பலனும் கொடுக்காமல் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு இரு பருவமழைகளும் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் பெய்கிறது. இந்த நீரைத் தேக்கிவைத்தால் தான் நிலத்தடி நீர் மட்டமும் உயரும், கால்நடைகளுக்கு குடிக்கவாவது தண்ணீர் கிடைக்கும். 

ஆனால் பெரும்பாலான நீர்நிலைகள் துார்வாரப்படவில்லை. இதனால் அதில் தண்ணீர் தேங்க வில்லை. துர்வாரப்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பினால், அது அடுத்த நீர்நிலைகளுக்கு செல்ல வழியில்லாததால் அதிகம் உள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து சேதம் விளைவிக்கிறது.

நீர்நிலை மேலாண்மையில் சிறப்பான பணியாற்றிய புதுக்கோட்டை சமஸ்தானம் உள்ள தமிழகத்தில் இவ்வளவு மோசமான நீர் மேலாண்மை இருப்பது வேதனையளிக்கிறது. அரசு காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற அனைத்து ஆறுகளிலும் தடுப்பு அணைகள் கட்டியிருக்க வேண்டும். 

மக்கள் கூட நீர் நிலைப்பாதைகளின் ஆக்கிரமிப்பில் இருந்து தாங்களே வெளியேறும் மனநிலைக்கு வர வேண்டும். கடந்த காலத்தைப் போல கால்வாய்கள் மூலம் இணைக்க வழியில்லாவிட்டால் குழாய்ள் வழியாகவாவது இணைத்து நீர்நிலைகளை எப்போதும் நிரம்பி இருக்கும் வகையில்பார்த்துக் கொள்ள வேண்டும். 

குடிநீர் பிரச்னைக்கு முதன்மைத் தீர்வாக உள்ளூரில் வழிகண்டு பிடிக்க வேண்டும். ஆறுகளின் ரத்தத்தை உறுஞ்சுவது போல ஆறுகளின் கீழ் உள்ள நிலத்தடி நீர் மட்டத்தை உறுஞ்சக்கூடாது.

ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக தெலங்கானா மாநில அரசு திகழ்கிறது. அம்மாநில அரசு உலகிலேயே மிகப் பெரிய திட்டமாக ரூ.80 ஆயிரம் கோடி செலவில் காலேஷ்வரம் நீர் பாசன திட்டத்தை அமல்படுத்த தொடங்கி உள்ளது. 

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டால் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர்ராவ் தான் நிரந்தர முதல்வர் என்று கூறப்படுகிறது.

ஆனால் நம் நிலை? எந்த ஆண்டும் இல்லாத வகையில் 4 முறை மேட்டூர் அணை நிரம்பி இருக்கிறது. முறையாக பராமரிப்பு இருந்தால் இந்த ஆண்டு மட்டும் அல்ல, அடுத்த ஆண்டும் டெல்டாவில் 3 போக சாகுபடி செய்திருக்க முடியும். ஆனால் டெல்டாவின் கடைமடைக்கு தண்ணீரே செல்லவில்லை. அத்தனையும் இடையில் தேக்கபிடிக்கப்படவில்லை. வேறு வழியில் வீணாக சென்று விட்டது.

இன்றைக்கு சென்னையில் மக்கள் தாகம் இல்லாமல் வாழ்கிறார்கள் என்றால் எம்ஜிஆர், ராமராவ் இடையே மேற்கொண்ட தெலுகு கங்கா திட்டம் தான் காரணம். இது போன்று நிலைத்த திட்டங்களை அமல்படுத்தும் போது தான் காலம் கடந்த பின்னரும் ஒரு அரசு நிலைக்கும். 

ஆனால் ஒட்டுக்கு இவ்வளவு என்று வசூல் பார்ப்பதும், தங்கள் ஊர் வேலை என்றாலும் திருவிளையாடல் சிவன் போலவே வேலை செய்வதும் தங்கள் வழக்கம் என மாறிவிட்ட மக்களும், அன்றாடம் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் அரசும், இருக்கும் வரை இது போன்று நடக்காது. இதில் இருந்து மாறுவதற்கு இளைஞர்கள் தான் முன்வர வேண்டும்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP