ராகுல் காந்திக்கு வாக்களித்தால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும்: தேனியில் முதல்வர் பேச்சு!

மக்களவைத் தேர்தலையொட்டி, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி இன்று தேனிக்கு வருகை தந்தார்.
 | 

நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 

தலை இல்லாத உடம்பு மாதிரி தான் காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும். பிரதமர் மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வர தமிழ் புத்தாண்டு ஏதுவாக இருக்கிறது. 

ராகுல் காந்திக்கு வாக்களித்தால் தமிழகம் பாலைவனமாக மாறி விடும். பிரதமர் யார் என்று தெரியாமலே காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. ஊழலை பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. ஊழலின் புகலிடம் திமுக. 'கூடா நட்பு கேடில் முடியும்' என்பதற்கு திமுக - காங்கிரஸ் கூட்டணியே சிறந்த எடுத்துக்காட்டு.  

உலகமே போற்றிய இந்திய பிரதமர் மோடி மட்டுமே. தீவிரவாத தாக்குதல் இல்லை என்பதை மோடி உறுதி செய்துள்ளார். எனவே நாட்டின் அடுத்த பிரதமராகவும் மோடியே நீடிக்க வேண்டும்" என்று பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP