ஹெச்.ராஜா நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் - ஸ்டாலின்

ஹெச்.ராஜா போன்றவர்கள் நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்று, கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 | 

ஹெச்.ராஜா நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் - ஸ்டாலின்

ஹெச்.ராஜா போன்றவர்கள்  நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

சிவகங்கை அரண்மனைவாசலில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின், ‘தகுதியின் அடிப்படையில் தான் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆளுங்கட்சியின் துணையுடன் பாஜக வேட்பாளராக ஹெச்.ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

மேலும், திராவிட இயக்கத்தை இழிவுப்படுத்தி பேசும் ஹெச்.ராஜாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று பேசிய அவர்,  ஹெச்.ராஜா போன்றவர்கள் நாடாளுமன்றம் போனால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP