தமிழக அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்: எம்.பி.வெங்கடேசன்

மதுரையின் வளர்ச்சிக்காக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
 | 

மதுரையில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில், ‘மதுரையின் வளர்ச்சிக்காக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றுவேன். என்னை வெற்றி பெறச் செய்த பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தராசைப்போன்று ஆளுங்கட்சி ஒரு தட்டு என்றால் மற்றொரு தட்டு எதிர்க்கட்சி. கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை எதிர்த்தது இல்லை ’ என்று கூறியுள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP