எனக்கு ரூ 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து உள்ளது- தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளர் சவால்!

சென்னை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் தனக்கு 1 லட்சத்துக்கு 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார்
 | 

எனக்கு ரூ 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சொத்து உள்ளது- தேர்தல் ஆணையத்துக்கு வேட்பாளர் சவால்!

சென்னை பெரம்பூர் சட்ட மன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஒருவர் தனக்கு 1 லட்சத்துக்கு 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாகவும், 4 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் இருப்பதாகவும் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

நெல்லை ஜெயமணியின் மகனும் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருமான மோகன்ராஜ் என்பவர், தேர்தல் ஆணையம் கண்டிப்பாக இருப்பது போல நடிப்பதாகவும், தங்கள் பணிகளை அவர்கள் சரிவர செய்வது கிடையாது என்றும் நிரூபிக்க நினைத்துள்ளார். 

அதற்காக, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில், அவர் தனக்கு, கோபாலபுரம், போயஸ்கார்டன், சிறுதாவூர், கோடநாடு உள்ளிட்ட பகுதிகளில் தனக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும், 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பாதாகவும் போலியான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

அதனை சரிபார்த்த தேர்தல் ஆணையமும் அவர் கூறியது உண்மை என்று ஆமோதித்து அவருக்கு பச்சை மிளகாய் சின்னம் ஒதுக்கி இருப்பது தான் வேடிக்கையின் உச்சம். சாதாரண சுயேட்சை வேட்பாளரின் ஆவணங்களையே இவ்வளவு மெத்தனமாக சரிபார்க்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், முக்கிய கட்சிகளுக்கு எந்த அளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ள மோகன்ராஜ், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை நாட்டு மக்களுக்கு தோலுரித்து காட்டவே தான் இப்படி ஒரு கணக்கை தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

தான் பல ஆண்டுகள் நேர்மையான காவல் ஆய்வாளராக பணிபுரிந்து விட்டு கடைசியாக பணம் சம்பாதிப்பதற்காக தியாகராய நகர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த 3 ஆண்டுகளில் லஞ்சம் பெற்று உயர் அதிகாரிகளுக்கு வழங்கியதால் எந்த  நடவடிக்கையும் இன்றி தப்பியதாகவும் அவர் தெரிவித்திருப்பதோடு, முடிந்தால் தன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று  சவால் விட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP