திமுகவை காப்பாற்ற போகிறேன் - அழகிரி அதிரடி

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தன்னை கட்சியை விட்டு ஒதுக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கருணாநிதியின் மகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி எச்சரித்துள்ளார்.
 | 

கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, மீண்டும் கட்சியில் முக்கிய பதவியில் அமர்த்தப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால், அழகிரி விலக்கப்பட்டார். திமுகவை தலைமையெடுக்க தான் தான் தகுதியானவர் என்று கூறிய அழகிரி, செப்டம்பர் மாதம் 5ம் தேதி 'தன் பின்னால் உள்ள உண்மையான திமுக தொண்டர்களுடன்' அமைதி பேரணி நடத்தவுள்ளதாக கூறினார். 

திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அழகிரி கட்சியில் இருந்து முற்றிலும் ஓரங்கட்டப் படுவார் என திமுக வட்டாரங்களில் பேசப்பட்டது. நாளை திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, "கலைஞர் இருந்தபோதே என்னை கட்சியில் சேர்க்க எதிர்ப்பு இருந்தது. அவர் இருந்ததாலேயே ஸ்டாலின் செயல் தலைவராக நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது அவர் இறந்துவிட்ட நிலையில், கட்சியை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறன். என்னை கட்சியில் சேர்க்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP