வெங்கையா நாயுடுவின் மாணவராகவே விழாவிற்கு வந்துள்ளேன்: அமித் ஷா பெருமிதம்!

நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய 'லிசனிங், லேர்னிங், லீடிங்' என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
 | 

புத்தகத்தை வெளியிட்டு விழாவில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "மக்களுக்கு பல்வேறு நல்ல பணிகளை ஆற்றிய வெங்கையா நாயுடு அவர்களின் மாணவர் என்ற முறையில் நான் இவ்விழாவிற்கு வந்துள்ளேன். மற்றபடி பாஜக தலைவராகவோ, உள்துறை அமைச்சராகவோ நான் இங்கு வரவில்லை. நாம் நமது வாழ்நாளில் எம்மாதிரி இருக்க வேண்டும் என்பதை அவரது வாழ்வில் மூலமாக ஆராய்ந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

கல்லூரி காலகட்டத்திலிருந்து துணை குடியரசுத் தலைவர் பதவி வரை அவர் எம்மாதிரியாக இருந்தார் என்பதை தற்போதைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. ஒரு மாணவராக வெங்கையா நாயுடுவிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். 

வாழ்நாள் முழுவதும் அவர் மக்களுக்காக பணியாற்றியுள்ளார். ஆந்திராவில் பிறந்து மிகவும் இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.பி உள்ளிட்ட இயக்கங்களில் இருந்து வாழ்வியல் கொள்கைகளை கடைபிடித்து அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இந்தப் புத்தகத்தின் தலைப்பு அவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. வாழ்நாள் முழுவதும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் வெங்கையா நாயுடு" என்று பேசினார். 

newstm.in

தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்: சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் அமித் ஷா பேச்சு!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP