அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி உறுதி

கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என்றும், வாணியம்பாடியில் இன்று அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய, முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
 | 

அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்: முதல்வர் பழனிசாமி உறுதி

கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என்றும், வாணியம்பாடியில் இன்று அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய, முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் யாரால் நிறுத்தப்பட்டது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது. அதிமுகவைப் பொருத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். நங்கள் எதை செய்ய முடியுமோ அதையே சொல்லி வாக்கு சேகரிப்போம். அதிமுக தான் ஆள்வதற்கு சிறந்த கட்சி என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிட்டார்கள். இந்தியாவில் எந்த அரசும் செய்யாததை அதிமுக அரசு தமிழகத்தில் செய்துள்ளது. 11 நகராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை பெற்றுத்தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா’ என்றார்.

மேலும், ‘கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களின் எண்ணங்கள் முழுவதும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். ஒரு நாடு சிறக்க வேண்டும் என்றால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் 6 சட்டக்கல்லூரிகளை கொடுத்து இருக்கிறோம். அமெரிக்க அரசால் செயல்படுத்த முடியாத திட்டத்தை, தமிழகத்தில் கல்விக்காக செயல்படுத்தி வருகிறோம். ரூ.12,000 மதிப்பிலான லேப்டாப், 43.53 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி இருக்கிறோம். குழந்தை பிறக்கும்போது ஏற்படும் இறப்பு விகிதத்தை 22-இல் இருந்து 16-ஆக குறைத்து இருக்கிறோம்’ என்றும் முதல்வர் பழனிசாமி பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP