எச்.ஐ.வி விவகாரம்: அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும்- கனிமொழி

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து பேசிய கனிமொழி எம்.பி, கர்ப்பிணி பெண்ணுடன் அந்த குழந்தையும் பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கச் செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.
 | 

எச்.ஐ.வி விவகாரம்: அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும்- கனிமொழி

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் குறித்து பேசிய கனிமொழி எம்.பி, கர்ப்பிணி பெண்ணுடன் அந்த குழந்தையும் பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கச் செய்கிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரத்தச் சிவப்பணு குறைபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாத்தூரில் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவரது ரத்தம் கர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்டுள்ளது பின்னர் தான் தெரிய வந்தது. இந்த விவகாரம் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சர்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த பெண்ணிற்கு மதுரை அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுற்குறித்த  செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதிலளித்த திமுக எம்.பி கனிமொழி, "எச்.ஐ.வி குறித்து தெரியாத ஒரு காலத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால் கூட தவறு செய்தவர்கள் என்ன காரணம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், எச்.ஐ.வி குறித்து பல்வேறு விழிப்புணர்வு, அதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிந்த ஒரு சூழ்நிலையில் சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்களே அலட்சியத்துடன் இதை செய்யும் போது சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. முதலில் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என்றால் அது இரு உயிரை சார்ந்தது என ஏன் அவர்களுக்கு தெரியவில்லை. 

எச்.ஐ.வி விவகாரம்: அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும்- கனிமொழி

தவறு செய்த அந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அவ்வளவு தான். தவறு செய்தவரை பணி நீக்கம் செய்வது என்பது மட்டும் தீர்வாகாது. இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பில்லாமல் அலட்சியமாக பதிலளிக்கிறார். 

கர்ப்பிணி பெண்ணுடன் அந்த குழந்தையும் பாதிக்கப்படுகிறது. இது எவ்வளவு வேதனையான விஷயம். தொடர்ந்து கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும். எச்.ஐ.வியினால் குழந்தை பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும். 

நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்துள்ளது. தமிழக அரசு இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது? சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்தார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP