இந்து தீவிரவாதி; கமல்ஹாசனுக்கு தமிழிசை கண்டனம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசிய கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
 | 

இந்து தீவிரவாதி; கமல்ஹாசனுக்கு தமிழிசை கண்டனம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசிய கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில், இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கமல்ஹாசனை கண்டிக்கிறோம். பள்ளபட்டியில் சிறுபான்மையினர் மத்தியில் பேசிய கமல் மத உணர்வுகளைத் தூண்டி, கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத கமல், ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி?...அரசியல் நடிப்பு... காந்தியை கொன்ற கொலையாளி தூக்கிலிடப்பட்டார்; இந்து தீவிரவாதம் என்பது விஷமத்தனமானது” என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP