தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முடியாது: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் கட்டாயமாக ஹிந்தியை திணிக்க முடியாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 | 

தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முடியாது: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் கட்டாயமாக ஹிந்தியை திணிக்க முடியாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் கட்டாயமாக இந்தியை திணிக்க முடியாது என்றும், தமிழக அரசும், தமிழக மக்களும் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் கூறினார். 

பேனர் வைப்பது தொடர்பாக பேசிய அவர்,  பொதுமக்களும், பிளக்ஸ்,பேனர் சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் அரசின் நிலைப்பாடு இருக்க வேண்டும் என தெரிவித்தார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கருத்தையும் யார் மீதும் திணிக்க முடியாது என தெரிவித்த அவர்,  காஷ்மீரில் இன்னும் ஒரு மாத காலத்தில் நிலைமை சீரடையும் என்றும் 70 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை 70 நாட்களில் தீர்க்க முடியாது எனவும் கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP