உயர் மின் கோபுரங்கள் - கேரளாவில் ஒரு கொள்கை, இங்கு ஒரு கொள்கையா? அமைச்சர் கேள்வி

அரசியல் காரணங்களுக்காக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தடுப்பதாகவும், கேரளாவிலும் உயர் மின் கோபுரங்கள் உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 | 

உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகள் மாற்றம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், நிர்வாக வசதிக்காக உள்ளாட்சி தோர்தல் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் அதிமுகவில் சேரலாம் என்றும், தனிப்பட்ட முறையில் யாரையும் அழைக்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வந்தால் தான் கட்சி வலுப்பெறும் என்ற நிலையில் அதிமுக இல்லை என கூறினார். இன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகள் முதலமைச்சரை சந்திக்கவுள்ள நிலையில், அதை திசை திருப்பவே வரும்18ஆம் தேதி உயர்மின் கோவுரம் அமைப்பதற்கு எதிரான போட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை தடுப்பதாக குற்றம்சாட்டிய அவர், கேரளாவிலும் உயர் மின் கோபுரங்கள் உள்ளது என்றும், கேரளாவில் ஒரு கொள்கை, இங்கு ஒரு கொள்கையா? என கேள்வி எழுப்பினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்று, அந்த வெற்றியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சமர்பிப்போம் என அமைச்சர் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP