கலைஞருக்கு புகழ் வணக்கம்.... ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க பா.ஜ.க திட்டம்?

கலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் பாஜக சார்பாக கலந்து கொள்ள இருந்த நிதின் கட்கரி, முரளிதர ராவ் ஆகியோரும் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
 | 

கலைஞருக்கு புகழ் வணக்கம்.... ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க பா.ஜ.க திட்டம்?

இன்று சென்னையில் நடக்க இருக்கும் கலைஞருக்கான புகழ் வணக்கம் நிகழ்ச்சிக்கு பா.ஜ.க அகில இந்தியத் தலைவர் அமித் ஷா வருவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அமித் ஷா வரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முரளிதர ராவ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியிருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க-வினர் யாரும் கலன்ந்து கொள்ள மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

கலைஞருக்கு புகழ் வணக்கம்.... ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க பா.ஜ.க திட்டம்?

அமித் ஷா இந்த விழாவைத் தவிர்த்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்தபோது, ஸ்டாலின் வருத்தத்துடன் பேசியதைச் சுட்டிக்காட்டி, இப்போது அமித் ஷா வந்தால், அவருக்கு உரிய மரியாதை கிடைக்குமா என்றெல்லாம் பா.ஜ.க தலைமைக்குச் சிலர் எடுத்துக்கூறியிருக்கிறார்கள். 

‘நாம் வழியச் சென்றாலும் நம் பக்கம் தி.மு.க வராது. இப்போது அந்தக் கூட்டத்துக்கு நீங்கள் வந்தாலும் எந்த மாற்றமும் நடக்கப்போவது இல்லை. மாறாக, கூட்டத்தில் உங்களுக்கு ஏதாவது அவமரியாதை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், நீங்கள் வருவதைத் தவிர்ப்பதே நல்லது’ எனப் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசையும்  எடுத்துக்கூறியிருக்கிறார்கள். அதன் பிறகே அமித் ஷா வருகை கேன்சல் செய்யப்பட்டது’’ என்கிறார்கள்.

கலைஞருக்கு புகழ் வணக்கம்.... ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க பா.ஜ.க திட்டம்?

தி.மு.க தலைவராக பெறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் ‘’இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வா, முதுகெலும்பில்லாத இந்த அரசைத் தூக்கி எறிய வா...’’ என பாஜகவை குறிவைத்து தாக்கினார். இதனால், கலைஞர் புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் பாஜக சார்பாக கலந்து கொள்ள இருந்த நிதின் கட்கரி, முரளிதர ராவ் ஆகியோரும் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. புகழ் வணக்கம் நிகழ்வில் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் பாஜகவை விமர்சிக்க வாய்ப்பிருக்கிறது.

பாஜகவினர் இருக்கும்போதே அப்படி விமர்சனம் எழுந்தால் தர்ம சங்கடமான நிலை உருவாகலாம் என்பதால் பா.ஜ.கவினர் ஒட்டு மொத்தமாக இந்த விழாவில் பங்கேற்பதை தவிர்க்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP