இந்த மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் மிதமான மழையும்,  ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செமீ மற்றும் கடலூரில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP