கஜானாவை காலி செய்துவிட்டு தான் எடப்பாடி போக நினைக்கிறார்!  மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

கஜானாவை காலி செய்துவிட்டு தான் எடப்பாடி போக நினைக்கிறார்! மு.க. ஸ்டாலின் ஆவேசம்!
 | 

கஜானாவை காலி செய்துவிட்டு தான் எடப்பாடி போக நினைக்கிறார்!  மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தைச் செயல்படுத்தியதன் விளைவாக  மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை போதிய  வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கைவிரித்துள்ளதை, அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
மறைந்த முதல்வர்  ஜெயலலிதா  உயிருடன் இருந்தவரை எதிர்த்த இந்த ஜி.எஸ்.டி சட்டத்தை, ஆதரித்த எடப்பாடி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 30.6.2017 நள்ளிரவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி சட்ட துவக்க விழாவிற்கு அன்றைய நிதியமைச்சர் திரு. ஜெயக்குமாரை அனுப்பி வைத்தது ஏன்?.

கஜானாவை காலி செய்துவிட்டு தான் எடப்பாடி போக நினைக்கிறார்!  மு.க. ஸ்டாலின் ஆவேசம்!
இழப்பீடு  இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்று மத்திய பா.ஜ.க. அரசு, சட்டரீதியாக பாராளுமன்றத்தில்  உறுதியளித்ததை  நம்பித் தான் பல்வேறு மாநிலங்களும் தங்கள் சட்டமன்றத்தில் ஜி.எஸ்.டி. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தன
ஜி.எஸ்.டி சட்டத்தைச் செயல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை குறித்த வாக்குறுதியையும், சட்டத்தையும் மீறியுள்ள மத்திய அரசு மீது தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும்
டெல்லி, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சார்ந்த நிதியமைச்சர்கள் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்கக் கோரி மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து முறையிட்டுள்ளார்கள்
தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்து விட்டுத் தான் போக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அதிமுக அரசு செயல்படுகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP