கட்சி ஆரம்பிக்கும் வ.கவுதமன்... ’கைவிலங்கை’ பரிசளிக்கும் எடப்பாடி!

இயக்குநர் வ.கவுதமன் புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் பரவ ஆரம்பித்ததும் அது தொடர்பாக உளவுத் துறையிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் முதல்வர். இதனால் அவர் மீது வழக்கு பாயலாம் எனக்கூறப்படுகிறது.
 | 

கட்சி ஆரம்பிக்கும் வ.கவுதமன்... ’கைவிலங்கை’ பரிசளிக்கும் எடப்பாடி!

இயக்குநர் வ.கவுதமன் புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் பரவ ஆரம்பித்ததும் அது தொடர்பாக உளவுத் துறையிடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறார் முதல்வர்.

கட்சி ஆரம்பிக்கும் வ.கவுதமன்... ’கைவிலங்கை’ பரிசளிக்கும் எடப்பாடி!

 கவுதமனை பற்றிய  அனைத்து விபரங்களை சேகரித்து முதல்வர் டேபிளுக்கு அனுப்பியிருக்கிறது உளவுத் துறை. அதில் குறிப்பாக, ‘கவுதமன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவரது கட்சி ஜாதி அடையாளத்துடன் இருக்கக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார் . அதனால் தொடங்கப் போகும் கட்சி என்பது மக்கள் மீதான அடக்குமுறையை தட்டிக் கேட்கும் கட்சி என்ற அடையாளத்துடன் தான் இருக்க வேண்டும் என்பது கவுதமன் திட்டம்.

கட்சி ஆரம்பிக்கும் வ.கவுதமன்... ’கைவிலங்கை’ பரிசளிக்கும் எடப்பாடி!

அவரது டார்கெட் கல்லூரி மாணவர்கள்தான். கடந்த 3 மாதங்களாகவே இதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடம் பேசி வருகிறார் கவுதமன். கட்சி ஆரம்பித்ததுமே அவரது முதல் அட்டாக் என்பது அரசாங்கத்தை நோக்கித்தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. ஆனால் அதே நேரத்தில் அரசுக்கு தொடர்ந்து குடைச்சலை கொடுத்தபடிதான் இருப்பார்..’ என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

கட்சி ஆரம்பிக்கும் வ.கவுதமன்... ’கைவிலங்கை’ பரிசளிக்கும் எடப்பாடி!

கவுதமன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள், அவர் ஜாமீனில் வந்திருக்கும் வழக்குகள் என எல்லாவற்றையும் தூசுதட்டி எடுக்கச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். அரசியல் கட்சி மாநாடு நடத்துவதற்குள் மீண்டும் ஏதாவது ஒரு பிரிவில் கவுதமன் மீது வழக்குகள் பாயலாம்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP