ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்புகளை தெரிந்துகொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்புகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடக விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் நடைபெற்றது. சபாநாயகர் வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துகிறார் என்று எடியூரப்பா குற்றம் சாட்டியிருந்தார். 

இதற்கிடையே நேற்று சட்டப்பேரவை இடைவேளையின் போது பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தனர். இதையடுத்து "முதலமைச்சர் என்பவர் அவையும் பெரும்பான்மையை பெற்று இருக்க வேண்டும். எனவே நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த வேண்டும்" என்று ஆளுநர் கூறியிருந்தார்.

இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை என்று நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுரை சொல்லக்கூடாது" என அவர் கண்டனம் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP