தெலுங்கு மொழியை கற்கும் ஆளுநர் தமிழிசை 

தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டிருப்பதாகவும், துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் புலமையில் கருணாநிதி போலவும் இருக்க விரும்புவதாகவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

சென்னையில் இன்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ‘ தெலுங்கு கற்றுக் கொண்டிருக்கிறேன்; சகோதர மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை. தெலங்கானா ஆளுநர் மாளிகையில் யோகாவை கட்டாயமாக்கியுள்ளேன். பிளாஸ்டிக் இல்லாத ஆளுநர் மாளிகையாக மாற்றி உள்ளேன். ஆளுநருக்கு பணியே இல்லாததுபோல் சிலர் பேசுகிறார்கள்;இப்போது பணி அதிகமாக உள்ளது’ என்றார்.

மேலும், துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் புலமையில் கருணாநிதி போலவும் இருக்க விரும்புவதாகவும், பாரதியார் பாடல்கள் என்னை எப்போதும் வழி நடத்தும் என்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP