சர்கார் படத்தை எதிர்க்கும் ஆளுங்கட்சி: திருநாவுக்கரசர் கடும் கண்டனம்!

தைரியம் இருந்தால் மோடி அரசு தாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து அறிவிக்க முடியுமா?, மோடி அரசு சீர்குலைத்த பொருளாதார வீழ்ச்சியை, காங்கிரஸ் சீர்திருத்தம் செய்யும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 | 

சர்கார் படத்தை எதிர்க்கும் ஆளுங்கட்சி: திருநாவுக்கரசர் கடும் கண்டனம்!

சர்கார் படத்தை எதிர்த்து ஆளுங்கட்சி நடத்தும் போராட்டத்தை காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளையொட்டி, நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுலவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் மாநில  தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், "இந்திய நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் ஒரு கருப்பு நாள். பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் இரவோடு இரவாக ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.  இந்தியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இந்த பண மதிப்பழப்பு நடவடிக்கை. இந்திய பொருளாதாரத்தின் மீது மோடி என்கிற தனிநபர் பிரதமர் பதவியை வைத்துக் கொண்டு தொடுத்த தனிநபர் தாக்குதல் இது.

சர்கார் படத்தை எதிர்க்கும் ஆளுங்கட்சி: திருநாவுக்கரசர் கடும் கண்டனம்!

மக்களிடம் இருந்த சுமார் ரூ.16 லட்சம் கோடியை டெபாசிட் செய்ய வைத்து மக்களை அடிமைகளாக்கி, வங்கியில் போட்ட பணத்தை வசதியானவர்களுக்கு அளித்து, இந்தியாவை ஏழ்மை நிலைக்கு தள்ளியது மோடியின் இந்த அறிவிப்பு. ஏற்கனவே 1968 ஆம் ஆண்டு 5000  ரூபாய் நோட்டு முடக்கப்பட்டு 1000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. அதில் ஒரு அர்த்தம் இருந்தது. ஆனால் மோடி  2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புதுமை செய்துள்ளார். மோடியின் பொருளாதார கொள்கை மூலம் அவர் சொன்னவற்றை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. தைரியம் இருந்தால் மோடி அரசு தாங்கள் நிறைவேற்றிய வெற்றி திட்டங்கள் குறித்து அறிவிக்க முடியுமா?" என கேள்வி எழுப்பினார் .

மேலும், "மோடி அரசு சீர்குலைத்த பொருளாதார வீழ்ச்சியை, காங்கிரஸ் அரசு சீர்திருத்தம் செய்யும்,மோடி அரசின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது, காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் அடுத்த பிரதமர்" என கூறினார். 

"சர்கார் படம் குறித்து ரஜினி கூறி இருக்கும் கருத்து சரிதான். அப்படம் சென்சார் சென்று தான் வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆளும் அரசு அப்படத்தின் பேனர்களை கிழிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு மூலம் தவறுகள் ஏற்படும் என பல கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். எனவே வாக்கு சீட்டு மூலம் வாக்கு செலுத்துவதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது" எனக் கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP