இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்று, சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு

சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்  மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், ’இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்று சென்னை எழும்பூரில் இசை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமியின் அனுமதி பெற்று அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்படும். இசை அருங்காட்சியகம் தொடர்பாக ஏ.ஆர்.ரகுமானை சந்திக்க உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு

முன்னதாக, பெங்களூருவில் உள்ளது போல் சென்னையிலும் இசை அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இசையமைப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP