தங்க தமிழ்ச்செல்வனின் கருத்து முட்டாள் தனமானது: ஓ.பன்னீர்செல்வம்

தான் பதவிக்காக வாரணாசி சென்றதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறிய கருத்து அடி முட்டாள் தனமான கருத்து என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். மேலும், நடந்து முடிந்த 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்
 | 

தங்க தமிழ்ச்செல்வனின் கருத்து முட்டாள் தனமானது: ஓ.பன்னீர்செல்வம்

தான் பதவிக்காக வாரணாசி சென்றதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறிய கருத்து அடி முட்டாள் தனமானது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார்.

மதுரையை அடுத்த திருமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த தர்மயுத்தம் காலம் துவங்கியதில் இருந்தே தங்க தமிழ்ச்செல்வனின்  கருத்திற்கு நான் பதில் கூறியதே இல்லை. ஆனால் தற்போது அவர், நான் பதவிக்காக வாரணாசி சென்றதாக கூறியுள்ள கருத்து அடி முட்டாள் தனமான கருத்து என கூறியுள்ளார்.

மேலும், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் துணிச்சல் இருந்தால் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தான் இருக்கிறோம் என தெரிவிப்பதுதான் வீரத்திற்கு அழகு, தற்போதைய அவர்களுடைய செயல்பாடு கோழைத்தனமாக உள்ளது என தெரிவித்தார். 

தங்க தமிழ்ச்செல்வனின் கருத்து முட்டாள் தனமானது: ஓ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து பேசிய துணை முதல்வர், அதிமுகவை பொருத்தவரை யார் எதிர்த்து நின்றாலும் யார் ஓட்டுக்களை பிரிப்பதற்கான கெட்ட எண்ணத்தில் இருந்தாலும் அது நடக்காது என்றும், அதிமுக என்பது தொண்டர்களுடைய இயக்கம்,  தொண்டர்களுக்கு உரிய மரியாதையும், வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் கூட சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஏன் முதலமைச்சராகவும் கூட ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவும், நடந்து முடிந்த   38 மக்களவை தொகுதிகள் மற்றும்  18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP