‘நாளை மாலை 6 மணியுடன் வெளியேற வேண்டும்’

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளியூர்க்காரர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
 | 

இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்யபிரதா சாஹூ அளித்த பேட்டியில் மேலும், ‘இடைதேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் நிறைவடைகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது. விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடி, 139 வாக்குப்பதிவு மையங்களும், நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடி, 170 வாக்குப்பதிவு மையங்களும் உள்ளன’ என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP