விவசாயிகள் தாங்களாக முன்வந்து நிலத்தை அளிக்கின்றனர் - இ.பி.எஸ் பேட்டி

விவசாயிகள் தாங்களாக முன்வந்து பசுமை வழி சாலை அமைக்க நிலங்களை அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 | 

விவசாயிகள் தாங்களாக முன்வந்து நிலத்தை அளிக்கின்றனர் - இ.பி.எஸ் பேட்டி

விவசாயிகள் தாங்களாக முன்வந்து பசுமை வழி சாலை அமைக்க நிலங்களை அளித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
சென்னை - சேலம் எட்டுவழி சாலை அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. சாலைக்கான எல்லைக் கற்கள் நடப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்களாக முன்வந்து நிலங்களை அளித்து வருகின்றனர்.

நிலம் கொடுப்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் இப்படி நிவாரணம் வழங்கப்படவில்லை. கட்டிடம், வீடு என்று எல்லாவற்றுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

சாலை அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவது இல்லை. அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதனால்தான் கைது செய்யப்படுகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கு ஏற்ப சாலைகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP