திமுகவில் வெடிக்கும் பூதாகார மோதல்! பிரசாந்த் கிஷோர் உள்ளே பழ. கருப்பையா வெளியே..!

திமுகவில் வெடிக்கும் பூதாகார மோதல்! பிரசாந்த் கிஷோர் உள்ளே பழ. கருப்பையா வெளியே..!
 | 

திமுகவில் வெடிக்கும் பூதாகார மோதல்! பிரசாந்த் கிஷோர் உள்ளே பழ. கருப்பையா வெளியே..!

‘அரசியல் கட்சியானது செயல்பாடுகள் மூலம் தான் மக்களை கவர வேண்டும், தனியார் ஏஜென்சிகளின் உதவியால் முன்னிலைப்படுத்துவது சரியானது அல்ல’ என்று கூறி பழ.கருப்பையா திமுகத் தலைவர் முக ஸ்டாலினைச் சந்தித்து கட்சியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டார். 

 2011ம் ஆண்டு சென்னைத் துறைமுகம் தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணத்தைக் கூறி ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா அதன் பின்னர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, திமுகத் தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் வெடிக்கும் பூதாகார மோதல்! பிரசாந்த் கிஷோர் உள்ளே பழ. கருப்பையா வெளியே..!

இத்தனை வருட அரசியலில் முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு இன்று வரையில் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தற்போது, முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என ஸ்டாலின் கங்கணம் கட்டிக் கொண்டு முழுவீச்சாக பணியாற்றி வருகிறார். மோடி, ஜெகன் மோகன் ரெட்டிகளுக்கு தேர்தல் ராஜதந்திரங்களை வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோரின் பக்கம் தற்போது ஸ்டாலின் தனது பார்வையை திருப்புவதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில், கார்ப்ரேட் கம்பெனிகளை நம்பும் அளவுக்கு திராவிடக் கட்சியான திமுக அதன் கொள்கைகளை இழந்து விட்டதா என்று என சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் திமுகவை கலாய்த்து வந்த நிலையில், பழ கருப்பையாவின் விலகலும், அதற்கான  விளக்கமும் திமுகவில் கார்ப்பரேட்களின் வருகையை உறுதிப் படுத்தியிருக்கின்றன.

திமுகவில் வெடிக்கும் பூதாகார மோதல்! பிரசாந்த் கிஷோர் உள்ளே பழ. கருப்பையா வெளியே..!

இது குறித்து பழ.கருப்பையா கூறுகையில், “ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக கட்சியை நடத்தும் விதம் கட்சியின் மீது பெரிய மனசலிப்பை உண்டாக்கி விட்டது. மாநிலங்களை பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து எனும் பொது அடையாளத்திற்குள் கொண்டு வருவது, என்பதெல்லாம் மொழி வழி, இன உணர்வை சிதைக்கின்றவை. திமுக இதன் ஆபத்தை உணரவில்லை என்று குற்றச்சாட்டுக்களை பழ கருப்பையா முன் வைத்தார். 
மேலும் கருணாநிதி ஜெயலலிதாவினுடைய காலம் வரை தமிழக அரசியல் கார்ப்பரேட்களை நம்பி அரசியல் செய்யவில்லை என்றும், அறிவார்ந்த இயக்கம் என்ற நிலையை இழந்து விட்டதாகவும் பழ கருப்பையா வேதனை அடைந்துள்ளார்.  
முதல்வர் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற கார்ப்பரேட்களின் கையில் கட்சியை அடமானம் வைப்பது தேவை தானா? என கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருப்பது முன்னணி நிர்வாகிகளையும் தற்போது  கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP