வாக்கு சாவடியில் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகா்களால் பரபரப்பு

சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது ரசிகர்கள் அவரை காண முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு (வேலூரை தவிர) இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது.இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து வருகிறது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

சென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களிக்க முயன்றார். அப்போது அவர் வரிசையில் நின்று இருப்பதை பார்த்து ஏராளமான ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீசார் அஜித்தையும் அவரது மனைவி ஷாலினியையும் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர். அஜித் வாக்குச்சாவடிக்குள் உள்ளே சென்று வாக்களிக்க உள்ளதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் வாக்குசாவடியை முற்றுகையிட முயன்றனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அஜித், ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு, அமைதியாக கடந்து சென்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP