ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினிகாந்த் நினைப்புதான்: அர்ஜுன் சம்பத்

ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினிகாந்த் நினைப்புதான் என்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.
 | 

ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினிகாந்த் நினைப்புதான்: அர்ஜுன் சம்பத்

ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினிகாந்த் நினைப்புதான் என்று இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில், தமிழகத்திலிருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், "தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கை ஆதரவு பெருகி வருகிறது. தாய்மொழி கொள்கைக்கு ஆதரவானது தான் இந்துத்துவக் கொள்கை. வருகின்ற 20 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாற்றி அமைத்து இருக்கின்றார். கீழ விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பதுபோல் உள்ளது. மும்மொழி கல்விக் கொள்கையை தமிழக மக்கள் விரும்புகின்றார்கள். தமிழக முதல்வர் மும்மொழி கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கட்டாயம் இஸ்ரேல் பயணம் செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் வாகனங்கள் உலகம் முழுவதும் தடைசெய்யப்பட உள்ளது. தமிழகத்தில் மின்சாரம் மற்றும் சூரிய ஒளியால் இயங்கும் வாகனத்தை அதிகரிக்கவேண்டும். இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய உள்ளூர் மக்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்படுத்தி  அதிகரிக்க வைக்க வேண்டும் இதை இந்து மக்கள் கட்சி ஆதரிக்கிறது.

வேளாண் துறையில் தற்போது முறைகேடு நடந்திருப்பது சட்டம் தன் கடமையை செய்யவேண்டும், முறைகேடு லஞ்சம் ஊழலில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இது சம்பந்தமாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' இந்தத் திட்டத்தை பயன்படுத்த தமிழக அரசு தயங்குகிறது. இந்து மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு ஸ்டாலின் பயந்து விட்டார், நாங்கள் 40 பள்ளிகளை முற்றுகையிடுவோம் என்று சொன்னதனால் பயந்துவிட்டார். ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பார் ஸ்டாலினை தோற்கடிப்பார். ஸ்டாலினுக்கு தூக்கத்தில் கூட ரஜினிகாந்த் நினைப்புதான்' என்று பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP